மகாராஷ்டிரா சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் வெளியாகி முதலமைச்சர் பதவி குறித்த விவாதத்தில் பாஜக-சிவசேனா கட்சிகளுக்கு இடையே தொடர்ந்து மாற்றுக்கருத்து நிலவிவருகிறது. சுழற்சி முறையில் முதலமைச்சர் பதவி கேட்டுவரும் சிவசேனா, பாஜகவின் தாய் கழகமான ஆ.எஸ்.எஸ். அமைப்பின் உதவியை நாடியுள்ளது.
சிவசேனா மூத்தத் தலைவர் கிஷோர் திவாரி ஆ.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத்துக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில், "சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் பாஜக-சிவசேனா கூட்டணிக்கு ஆதரவாகவே உள்ளது. கூட்டணி தர்மத்தை பின்பற்றாத பாஜகவால்தான் ஆட்சி அமைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. எனவே, இதில் தலையிட்டு உடனே பிரச்சனையைத் தீர்க்க வேண்டும்" எனக் குறிப்பிட்டுள்ளார்.
ஆர்.எஸ்.எஸ். அமைப்பிடமிருந்து எந்தப் பதிலும் வந்ததாகத் தெரியவில்லை. தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் ஆகிய கட்சிகளுடன் இணைந்து சிவசேனா ஆட்சி அமைக்க முயற்சிப்பதாக தகவல் வெளியான நிலையில் இந்தக் கடிதம் மகாராஷ்டிரா அரசியலின் குழப்பத்தை தீர்க்குமா எனக் கேள்வி எழுந்துள்ளது.
இதையும் படிங்க: சிவசேனாவுக்கு ஆதரவு தர மறுக்கிறாரா சோனியா காந்தி?