ஜம்மு காஷ்மீரில் உள்ள ரஜோரி மாவட்டத்தில் இன்று (ஜூன் 10) அதிகாலை பாகிஸ்தான் ராணுத்தினர் அத்துமீறி தாக்குதல் நடத்தினர். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தியது. இந்த மோதலின்போது, ஹவில்தார் குருங் என்பவர் படுகாயமடைந்தார். உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கருங் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.
லைன் ஆப் கன்ட்ரோல் எனப்படும் இந்தியா - பாகிஸ்தான் எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் தொடர்ந்து அத்துமீறலில் ஈடுபட்டு வருகிறது. இந்த ஆண்டில் மட்டும் சுமார் 2 ஆயிரத்து 500க்கும் மேற்பட்ட அத்துமீறலை பாகிஸ்தான் ராணுவம் மேற்கொண்டுள்ளதாக இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது.
இந்த அத்துமீறலால் பாதுகாப்பு படையினர் மட்டுமல்லாது பொதுமக்கள், கால்நடைகள் உயிரிழக்கும் சம்பவமும் அரங்கேறிவருகிறது.
இதையும் படிங்க: ஆசியாவின் மிகப்பெரிய சோலார் திட்டம்; தெரிந்து கொள்ள வேண்டிய தகவல்கள்!