குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து டெல்லியில் தொடர்ச்சியாக பல போராட்டங்கள் நடைபெறுகின்றன. குறிப்பாக ஷாகீன் பாக் பகுதியில் இரு மாதங்களுக்கும் மேலாக நூற்றுக்கணக்கான மக்கள் போராடிவருகின்றனர். இது போன்ற போராட்டம் குறித்து தனது எதிர்ப்பை பதிவு செய்த மத்திய இணை அமைச்சர் அனுராக் தாக்கூர் தேச துரோகிகளை சுட்டு வீழ்த்த வேண்டும் என வெறுப்பை தூண்டும் விதத்தில் கருத்து தெரிவித்தார். அதே போல் டெல்லி பாஜக தலைவர் கபில் சர்மாவும் போராட்டக்காரக்கள் குறித்து காட்டமான விமர்சனத்தை முன்வைத்தார்.
இந்நிலையில், அனுராக் தாக்கூர், கபில் ஆகியோர் வெறுப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் சர்ச்சை கருத்துக்களை கூறியதாக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கின் மீதான விசாரணை வரும் 4ஆம் தேதி நடைபெறும் என உச்ச நீதிமன்ற நீதிபதி எஸ்.ஏ போப்டே தெரிவித்துள்ளார்.
மனுவை விசாரித்த நீதிபதி போப்டே, நாட்டின் அமைதியை விரும்பும் நீதிமன்றம், இது போன்ற அழுத்தமான சூழலை கவனத்துடன் எதிர்கொள்ள விரும்புவதாகத் தெரித்தார்.
டெல்லி கலவரத்தில் உளவுத்துறை அலுவலர் உள்ளிட்ட 47 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர். இந்த கலவரம் குறித்து 254 பேர் மீது முதல் தகவல் அறிக்கை தாக்கல் செய்துள்ள காவல்துறை, 903 பேரை கைது செய்துள்ளது.
இதையும் படிங்க: சர்ச்சை முழக்கம் எழுப்பிய பாஜகவினர் கொல்கத்தாவில் கைது