மத்தியப் பிரதேச மாநில காங்கிரசின் முக்கியத் தலைவராகத் திகழ்ந்த ஜோதிராதித்ய சிந்தியா, அண்மையில் அக்கட்சியிலிருந்து விலகி பாஜகவில் இணைந்தார். மேலும் அவரது ஆதரவு அமைச்சர்கள் ஆறு பேர் உள்ளிட்ட 22 சட்டப்பேரவை உறுப்பினர்கள், பெங்களூருவில் உள்ள சொகுசு விடுதியில் தங்கவைக்கப்பட்டனர். மேலும் 22 பேரும் தங்கள் ராஜினாமா கடிதங்களை அவைத்தலைவருக்கு அனுப்பிவைத்தனர்.
அதில், சிந்தியா ஆதரவு அமைச்சர்கள் ஆறு பேரின் ராஜினாமாவை ஆளுநர் ஏற்றுக்கொண்டு, அமைச்சரவையிலிருந்து நீக்கினார். இதையடுத்து ஆறு பேரின் ராஜினாமா கடிதங்களை அவைத்தலைவரும் ஏற்றுக்கொண்டதால், அவர்கள் எம்எல்ஏ பதவியை இழந்தனர்.
இந்நிலையில், முதலமைச்சர் கமல்நாத் சட்டப்பேரவையில் நேற்று பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என ஆளுநர் உத்தரவிட்டார். அப்போது, கொரோனா வைரஸ் எதிரொலியால், சட்டப்பேரவை மார்ச் 26ஆம் தேதி வரை ஒத்திவைக்கப்பட்டது. மேலும், ஆளுநர் முன்னதாக குறிப்பிட்டதை சுட்டிக்காட்டி நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என உத்தரவிட்டார்.
மேலும் 48 மணி நேரத்துக்குள் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த உத்தரவிடக் கோரி உச்ச நீதிமன்றத்தில் பாஜக தலைவர் சிவ்ராஜ் சிங் சவுகான் மனு தாக்கல்செய்தார். அவருடன் மேலும் ஒன்பது பாஜக சட்டப்பேரவை உறுப்பினர்களும் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல்செய்துள்ளனர்.
இந்த மனுக்கள் மீதான விசாரணை இன்று நடைபெறவிருந்த நிலையில், மனுவை நாளை விசாரிக்க இருப்பதாக உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க...சட்டப்பேரவை நிகழ்வுகள்: உடனுக்குடன் வழங்குகிறது நமது ஈடிவி பாரத்