சபரிமலை கோயிலுக்குள் அனைத்து வயது பெண்களுக்கும் அனுமதி மறுப்பு, மசூதிகளில் பெண்களுக்கெதிரான பாகுபாடு, தாவோதி போக்ரா சமூகத்தில் காணப்படும் பெண் உறுப்புச் சிதைப்பு மூடநம்பிக்கை, பார்சி அல்லாத ஆண்களைத் திருமணம் செய்யும் பார்சி பெண்களுக்குச் சொத்து உள்ளிட்ட உரிமைகள் மறுப்பு உள்ளிட்ட வழக்குகள் மீதான மேல்முறையீட்டு மனுக்களை உச்ச நீதிமன்றம் விசாரித்துவருகிறது.
இந்த மனுக்கள் மீதான விசாரணை நாளை (பிப்.6) மீண்டும் விசாரணைக்கு வருகிறது. அப்போது, மேல்முறையீட்டு மனுக்கள் மீதான சட்டத்திலுள்ள முக்கியக் கேள்விகள் குறித்து நீதிமன்றம் விசாரிக்கவுள்ளது.
சபரிமலை கோயிலுக்குள் அனைத்து வயது பெண்களுக்கும் அனுமதியில்லை. ஒரு குறிப்பிட்ட வயதுடைய பெண்களே இதுவரை அனுமதிக்கப்பட்டுவருகின்றனர். இந்த நடைமுறைக்கு எதிராகத் தொடுக்கப்பட்ட மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், அனைத்து வயது பெண்களுக்கும் அனுமதி அளித்தது தீர்ப்பளித்தது. இந்தத் தீர்ப்புக்கு எதிராக கேரளாவில் போராட்டங்கள் நடந்தது. மேலும் இந்தத் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: ஷாகீன் பாக் துப்பாக்கிச் சூடு நடத்தியவர் ஆம் ஆத்மி உறுப்பினர் அல்ல: குடும்ப உறுப்பினர்கள் தகவல்