ETV Bharat / state

“நிதி சார்ந்த கோரிக்கைகளில் தமிழக அரசு துரோகம் செய்கிறது”- அரசு ஊழியர்கள் சங்கம் - GOVERNMENT EMPLOYEES ASSOCIATION

தமிழ்நாடு அரசுப் பணியில் உள்ள ஊழியர்கள், ஆசிரியர்களுக்கான பழைய ஓய்வூதியத் திட்டம் போன்ற நிதி சார்ந்த கோரிக்கைகள் அரசு நிறைவேற்றாமல் துரோகம் செய்யவதாக தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கம் செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கம்  வெளியிட்ட செய்தி அறிக்கை
தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கம் வெளியிட்ட செய்தி அறிக்கை (Credits- ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 10, 2024, 2:28 PM IST

சென்னை: தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கத்தின் மாநிலத் தலைவர் தமிழ்ச்செல்வி, பொதுச் செயலாளர் ஜெயராஜராஜேஸ்வரன் செய்தி அறிக்கை ஒன்றை இன்று வெளியிட்டுள்ளனர். அதில், “கடந்த காலங்களில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் போராடிய இடத்திற்கெல்லாம் வந்து நாங்கள் ஆட்சிக்கு வந்தால் தேனாறும், பாலாறும் ஓடும் என்று வாக்குறுதிகளை அள்ளிவிட்டனர்”.

“பழைய ஓய்வூதியத் திட்டம் என்னாச்சு”: “ஆனால் தற்போதைய தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் 2021ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலின் போது அளித்த வாக்குறுதிப்படி புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து, பழைய ஓய்வுதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்துவோம் என்று அறிவித்திருந்தது. ஆனால், வெற்றி பெற்று மூன்றரை ஆண்டுகள் முடிவடைந்தும் இதுவரை கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றவில்லை என்பது தமிழ்நாட்டில் உள்ள ஒட்டுமொத்த அரசு ஊழியர் ஆசிரியர்களுக்கு ஏமாற்றம் அளிப்பதாக உள்ளது”.

முன்று ஆண்டுகளில் ஏற்பட்ட முடக்கங்கள்: “ஆட்சிக்கு வந்த மூன்றரை ஆண்டுகளில் 24 மாதகால அகவிலைப்படியை முடக்கினர். அரசுஊழியர்கள், ஆசிரியர்கள் பெற்று வந்த ஊக்க ஊதிய உயர்வை முடக்கினர். அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் ஆண்டாண்டு காலமாக பெற்று வந்த ஈட்டிய விடுப்பு ஒப்படைப்பை முடக்கினர். கருணை அடிப்படையிலான பணிநியமனத்தை 25 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாக குறைந்ததன் மூலம் கருணை அடிப்படையிலான பணிநியமனத்தையும் முடக்கினர்”.

இதையும் படிங்க: ‘மூஞ்ச பார்த்தாலே தெரிகிறது’ - சமூகத்தை குறிப்பிட்டு இளைஞரை தாக்கிய போலீஸ்!

பணியிடங்களை நிரப்புவதில்லை: “பல துறைகளில் காலியாக இருக்கும் பணியிடங்களை நிரப்பாமல் அப்பணியிடங்களை ஒப்படைத்ததற்கான எவ்விதமான அரசாணைகளும் வெளியிடாமல் மௌனமாக பணியிடங்களை மொத்தப் பணியிட எண்ணிக்கையிலிருந்து முடக்கி எதிர்கால இளைஞர்களின் அரசுப் பணி கனவை முடக்கினர். ஆசிரியர்களின் அனைத்து உரிமைகளையும் பறித்தது தான் இவர்களின் மூன்றாண்டு கால சாதனையாக உள்ளது. கடந்த ஆறு மாதத்திற்கு முன்னர் தமிழக முதலமைச்சர் திருமண நிகழ்வொன்றில் தேர்தல் வாக்குறுதி அனைத்தையும் நிறைவேற்றி விட்டதாகத் தெரிவித்திருந்தார். அதைக் கண்டித்து மாவட்டத் தலைநகரங்களில் ஆர்ப்பாட்டங்களை நடத்தி இருந்தோம்”.

நிதி சார்ந்த கோரிக்கைகள் நிறைவேற்றப்படுவதில்லை: “தலைமைச் செயலகத்தில் நேற்று நடைபெற்ற பள்ளிக்கல்வித்துறை ஆய்வு கூட்டத்தில் தமிழக முதலமைச்சர் நிதிசாராத கோரிக்கைகளை மட்டுமே நிறைவேற்ற உத்தரவிட்டுள்ளதாக தகவல் வருகிறது. புதிய ஓய்வூதியத்திட்டம் உள்ளிட்ட நிதிசார்ந்த கோரிக்கைகளை நிறைவேற்ற வாய்ப்பில்லை என்று தெரிவித்துள்ளதன் மூலம் அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு துரோகம் இழைத்துள்ளார். இதை தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கம் வன்மையாக கண்டிக்கிறோம்”.

நிதி நிலை சரியாகும் வரை முதலமைச்சர் ஊதியம் வேண்டாம் என சொல்வாரா? “உண்மையிலேயே நிதி நிலை மோசமாக உள்ளது என்றால் நிதி நிலை சரியாகும் வரை எங்ளுக்கு ஊதியம் வேண்டாம் என்று தமிழக முதல்வரும் அவரின் அமைச்சர், சட்டமன்ற உறுப்பினர் சகாக்களும் அறிவிப்பார்களா? நிதிநிலை சரியாகும் வரை எங்களுக்கான ஓய்வூதியம் வேண்டாம் என்று முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் தெரிவிப்பார்களா?. நிதி நிலை மோசம் என்று கூறும் இந்திய ஆட்சிப் பணியில் பணியாற்றிக் கொண்டிருக்கும் உயர் அலுவலர்கள் தங்கள் ஊதியத்திலிருந்து 10 சதவீதம் விட்டுக் கொடுப்பார்களா? என்ற கேள்வியை முன்வைத்துள்ளனர் ”.

“சிபிஎஸ் சந்தா தொகை தவறுதலாக கையாளப்படுகிறது”: “அரசு ஊழியர்கள், ஆசிரியர்களிடம் பிடித்தம் செய்யப்பட்ட சிபிஎஸ் சந்தா தொகை தமிழ்நாடு அரசால் தவறுதலாக கையாளப்பட்டுக் கொண்டிருக்கிறது என்ற பகிரங்க குற்றச்சாட்டை முன்வைக்கிறோம். போக்குவரத்துத் துறை ஊழியர்கள் எப்படி தற்போது ஓய்வூதியப் பயன்கள் ஏதும் கிடைக்காமல் நடுத்தெருவில் விடப்பட்டார்களோ? அதே நிலைமை தான் அரசு ஊழியர்கள் ஆசிரியர்களுக்கும் வரப்போகிறது.

இனியும் பொறுத்துக் கொள்ள முடியாது. எதிர்கட்சித் தலைவராக இருந்தால் மட்டுமே அரசு ஊழியர்கள், ஆசிரியர்களை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் சந்தித்துப் பேசினார். தற்போது ஏன் அழைத்து பேசவில்லை”

ஈடிவி பாரத் தமிழ்நாடு
ஈடிவி பாரத் தமிழ்நாடு (Credits- ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.