கரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் டாஸ்மாக் கடைகளை திறக்கும் அரசின் முடிவை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், சில நிபந்தனைகளுடன் கடைகளை திறக்க அனுமதி அளித்தது.
அதைத்தொடர்ந்து மே 7ஆம் தேதி டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டன. அப்படி திறக்கப்பட்ட கடைகளில் அரசு கரோனா பாதுகாப்பு நிபந்தனைகளை மீறியதாகக் கூறி உயர் நீதிமன்றம் தமிழ்நாட்டில் அனைத்து டாஸ்மாக் கடைகளையும் மூட அரசுக்கு உத்தரவிட்டது. அந்த உத்தரவை எதிர்த்து தமிழ்நாடு அரசு, உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுவைத் தாக்கல் செய்தது.
அந்த மனு மீதான விசாரணையில் இன்று நீதிபதிகள் எல். நாகேஸ்வர ராவ், எஸ்.கே. கவுல் மற்றும் பி.ஆர். கவாய் ஆகியோர் அடங்கிய அமர்வு அரசுத் தரப்பு வழங்குரைஞர் யோகேஷ் கண்ணா வாதத்தை கேட்டறிந்தனர். அதையடுத்து அவர்கள், சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்து தமிழ்நாட்டில் அனைத்து டாஸ்மாக் கடைகளையும் திறக்க நிபந்தனைகளுடன் அனுமதியளித்தனர்.
இதையும் படிங்க: டாஸ்மாக் பதிலாக அரசிற்கு வருவாயை ஏற்படுத்த 4 முதல் 5 ஆண்டுகள் ஆகும்!