கரோனா வைரஸ் காரணமாக அங்கன்வாடிகள், சத்துணவுக் கூடங்கள் மூடப்பட்டுள்ளன. ஏழை மாணவர்கள் இதன் விளைவாக சத்துணவு குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளனர் என உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்த மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொண்ட உச்சநீதிமன்றம், இதுகுறித்த பிரமாணப் பத்திரத்தை மத்திய அரசு இரண்டு வாரங்களில் தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டது. முன்னதாக, மார்ச் மாதம், அங்கன்வாடிகள், சத்துணவுக் கூடங்கள் மூடப்பட்டது குறித்து உச்ச நீதிமன்றம் தானாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துக் கொண்டது.
ஏழை, எளிய மாணவர்களைப் பயிற்றுவிக்கும் நோக்கிலும் அவர்களின் உணவுப் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையிலும் சத்துணவுத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.