டெல்லி திஸ் ஹசாரி நீதிமன்றத்தில் வாகனம் நிறுத்துவது தொடர்பான வாக்குவாதத்தில் டெல்லி காவல் துறையினருக்கும் வழக்கறிஞர்களுக்கும் இடையே நவம்பர் 2ஆம் தேதி மோதல் ஏற்பட்டது. அப்போது, வழக்கறிஞர் மீது காவல் துறையினர் துப்பாக்கியால் சுட்டனர். இதில், காயமடைந்த வழக்கறிஞர் ஒருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பதிலுக்கு, நீதிமன்ற வளாகத்திலிருந்த காவல் துறை வாகனம் கொளுத்தப்பட்டது.
![SC refuses](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/5388214_sc.jpg)
இந்தச் சம்பவத்தால் தங்களுக்கு உரிய பாதுகாப்பு இல்லை எனக்கூறி வழக்கறிஞர்களுக்கு எதிராக டெல்லி காவல் துறை தலைமையகம், உச்ச நீதிமன்ற வளாகம், இந்தியா கேட் ஆகிய பகுதிகளில் நவம்பர் 5ஆம் தேதி காவல் துறையினர் திடீர் போராட்டம் மேற்கொண்டனர்.
இதனிடையே, இந்தப் போராட்டம் இந்திய அரசியலமைப்புச் சட்டத்துக்கு களங்கம் விளைவிக்கும் செயல் எனக்கூறி காவல் துறையினருக்கு எதிராக வழக்கறிஞர் ஜி.எஸ். மணி என்பவர், உச்ச நீதிமன்றத்தில் அவரச வழக்கு ஒன்றை தாக்கல் செய்தார்.
ஆனால், இதை அவசர வழக்காக விசாரிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க: குடியுரிமை சட்டத்திருத்தத்துக்கு எதிர்ப்பு: கேரளாவில் கூட்டாகப் போராடும் முதலமைச்சரும், எதிர்க்கட்சி தலைவரும்..!