கார்ப்பரேட் சமூக பொறுப்புணர்வு (சி.எஸ்.ஆர்) நிதி வரம்பிலிருந்து முதலமைச்சர்களின் நிவாரண நிதியைத் தவிர்த்து, கார்ப்பரேட் விவகாரங்கள் அமைச்சகம் (எம்.சி.ஏ) வெளியிட்டுள்ள சுற்றறிக்கையின் செல்லுபடிக்கு எதிர்த்து திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. மஹுவா மொய்த்ரா, உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தாக்கல் செய்தார்.
இந்த வழக்கு செவ்வாய்க்கிழமை (மே5) வீடியோ கான்பரன்சிங் மூலம் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அசோக் பூஷண், சஞ்சய் கிஷன் கவுல், பி.ஆர். கவாய் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தனர். அப்போது மொய்த்ரா தரப்பு வழக்குரைஞர் சி.எஸ்.ஆர் செலவினத்தின் கீழ் முதலமைச்சர்களின் நிவாரண நிதிக்கு நன்கொடைகள் தகுதிபெற அனுமதிக்க வேண்டும் என்று வாதாடினார்.
இதனை ஏற்க மறுத்த நீதிபதிகள், “இது நீதிமன்றத்தில் எழுப்பப்பட வேண்டிய விவகாரம் அல்ல. இந்தச் சட்டத்திட்டம் தொடர்பாக மனுதாரர், பாராளுமன்றத்தில் விவாதிக்க முடியும்” என்று அறிவுறுத்தினார். மொய்த்ராவுக்காக ஆஜரான வழக்குரைஞர் சி.ஏ. சுந்தரம், அரசாங்க சட்டத்தின் கீழ் கோவிட் -19 ஒழிப்புக்கான சி.எஸ்.ஆர் சி.எஸ்.ஆராக கருதப்படுவதற்கு உரிமை உண்டு, அது மத்திய அரசுக்கு நன்கொடையாக வழங்கப்பட்டால், எழும் பிரச்சினை என்று வாதிட்டார்.
இதையடுத்து மொய்த்ராவின் வழக்குரைஞர் சுந்தரம் மனுவை வாபஸ் பெற்றார்.