ETV Bharat / bharat

குடிபெயர்ந்த தொழிலாளர்கள் விவகாரம்: உச்ச நீதிமன்றத்தில் மனித உரிமை ஆணையம்!

டெல்லி: நாடு முழுவதும் உள்ள குடிபெயர்ந்த தொழிலாளர்களுக்கு ஏற்பட்டுள்ள துயர் தொடர்பான உச்ச நீதிமன்ற வழக்கில், தேசிய மனித உரிமை ஆணையம் தன்னை வாதியாக இணைத்துள்ளது.

SC
SC
author img

By

Published : Jun 6, 2020, 3:02 PM IST

கடந்த மார்ச் மாதம் அறிவிக்கப்பட்ட கரோனா ஊரடங்கு காரணமாக நாட்டின் அனைத்து நடவடிக்கைகளும் முற்றிலுமாக முடங்கியுள்ளன. இதன் நேரடி தாக்கமாக, மற்ற மாநிலங்களில் வேலைபார்த்த லட்சக்கணக்கான தொழிலாளர்கள் வேலையிழந்து, தங்கள் சொந்த ஊர்களுக்குத் திரும்பிச் செல்லும் சூழுல் உருவானது.

ஆரம்பக் கட்டத்தில் இந்தத் தொழிலாளர்கள் உணவு, உறைவிடமின்றி, போக்குவரத்து வசதியில்லாமல் கால்நடையாகவே பல மயில் தூரம் நடந்தே செல்லும் அவலநிலை ஏற்பட்டது. இந்த விவகாரம் நாடு முழுவதும் உலுக்கிய நிலையில், உச்ச நீதிமன்றம் தாமாகவே முன்வந்து வழக்குப் பதிவு செய்து மத்திய, மாநில அரசுகளுக்கு பல்வேறு வழிகாட்டுதல்களைத் தெரிவித்துவருகிறது.

இந்நிலையில், தேசிய மனித உரிமை ஆணையம், குடிபெயர்ந்த தொழிலாளர்கள் வழக்கில் தன்னையும் இணைத்துக் கொள்ளுமாறு, உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது. இந்த மனுவை உச்ச நீதிமன்றம் ஏற்றுக்கொண்டது.

இதையடுத்து நாடு முழுவதும் உள்ள குடிபெயர்ந்த தொழிலாளர்களின் எதிர்காலத்தைச் சீரமைக்கும் விதமாக, குறுகிய மற்றும் நீண்ட கால திட்டங்கள் உள்ளடக்கிய பட்டியலை, மனித உரிமை ஆணையம் முன்வைத்துள்ளது. இந்த வழிகாட்டுதலை மத்திய, மாநில அரசுகள் நிறைவேற்ற உச்ச நீதிமன்றம் உத்தரவிட வேண்டும் எனவும் கோரியுள்ளது.

இதையும் படிங்க: ஊரடங்கில் நெகிழி பூந்தொட்டிகளை செய்து பொழுதைக் கழிக்கும் ஆசிரியர்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.