மத்தியப் பிரதேச சட்டப்பேரவையில் உடனடியாக நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தக்கோரி, அம்மாநில முன்னாள் முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். இந்நிலையில், நாளையே நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
காங்கிரஸ் கட்சியின் அதிருப்தி சட்டப்பேரவை உறுப்பினர்கள் 16 பேர் நம்பிக்கை வாக்கெடுப்பில் கலந்துகொள்வதற்கு தடை ஏதும் இல்லை எனவும் உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. நம்பிக்கை வாக்கெடுப்பை காணொலி மூலம் பதிவுசெய்ய வேண்டும் எனவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மேலும், பெங்களூருவில் தங்கியுள்ள அதிருப்தி சட்டப்பேரவை உறுப்பினர்களின் பாதுகாப்பை, கர்நாடக காவல் துறைத் தலைவர் உறுதிசெய்ய வேண்டும் எனவும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.