2010ஆம் ஆண்டு மே 22ஆம் தேதி துபாயிலிருந்து மங்களூரு வந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் தரையிரங்கும்போது ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக விபத்துக்குள்ளானது. இதில், விமானத்தில் பயணம் செய்த 168 பேரில் 158 பேர் உயிரிழந்தனர்.
இந்த விபத்தில் துபாயில் உள்ள தனியார் நிறுவனத்தைச் சேர்ந்த 42 வயதான மகேந்திரா கோத்கானி என்ற நபர் பரிதாபமாக உயிரிழந்தார். இவரின் மனைவி மற்றும் இரு குழந்தைகளுக்கு உரிய நிவராணம் வழங்க வேண்டும் எனக் கோரிக்கை வைக்கப்பட்டது.
அவர் பணிபுரிந்த நிறுவனம் ஏர் இந்தியாவுடன் மேற்கொண்ட பயண ஒப்பந்தை மேற்கோள்காட்டி, குடும்பத்தினருக்கு 7.35 கோடி ரூபாய் நிவாரணம் அளிக்க தேசிய நுகர்வோர் குறைதீர்ப்பு ஆணையத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு பத்தாண்டுகளுக்கும் மேலாக நிலுவையில் இருந்த நிலையில், இந்த விவகாரம் உச்ச நீதிமன்றத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டது.
இந்த விவகாரம் தொடர்பாக உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிகள் சந்தரசூத், அஜய் ரோத்தகி ஆகியோர் தலைமையிலான அமர்வு குடும்பத்தினருக்கு ஏர் இந்திய நிறுவனம் உரிய இழப்பீடு தொகையான 7.35 கோடி ரூபாயை உடனடியாக வழங்க உத்தரவிட்டுள்ளது. மகேந்திரா கோத்கானி குடும்பத்தினர் பத்தாண்டுகளாக நடத்திவந்த போராட்டத்திற்குத் தற்போது விடிவு கிடைத்துள்ளது.
இதையும் படிங்க: போர் நிறுத்த ஒப்பந்தம் மீறல்: இந்தியாவின் மூத்த உயர் அலுவலருக்கு பாகிஸ்தான் சம்மன்