ETV Bharat / bharat

பட்டயக் கணக்காளர் தேர்வுகளை நடத்த முடியாது - ஆன்லைன் முறையில் தேர்வுகளை நடத்த முடியாது

பட்டயக் கணக்காளர் தேர்வு வடிவம் ஆன்லைன் முறையில் எழுதுவதற்கு ஏற்றதாக இருக்காது என்பதால் ஆன்லைன் முறையில் தேர்வுகளை தற்போது நடத்த இயலாது என இந்திய பட்டயக் கணக்காளர் மையம் தெரிவித்துள்ளது.

SC asks ICAI to notify about steps taken for CA exams in view of COVID-19

author img

By

Published : Nov 4, 2020, 5:36 PM IST

கரோனா பேரிடர் காலத்தைக் கருத்தில்கொண்டு கல்லூரி, பல்கலைக்கழக இறுதியாண்டு மாணவர்கள் அனைவரும் தேர்வுகளை ஆன்லைன் வழியாக எழுதினர். இதேபோல பட்டயக் கணக்காளர் தேர்வுகளும் நடத்த திட்டமிடப்பட்டிருந்தது.

இதற்கிடையில், கரோனா பரவல் காரணமாகவும், பிகார் சட்டப்பேரவைத் தேர்தல் காரணமாகவும் இரண்டு முறை தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டன. தற்போது நவம்பர் 21 முதல் டிசம்பர் 14 ஆம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தன.

தற்போது, மத்திய அரசு வெளியிட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகள் பட்டயக் கணக்காளர் தேர்வுகளில் பின்பற்றப்படுமா எனக் கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இதனை விசாரித்த நீதிபதிகள், இந்திய பட்டயக் கணக்காளர் மையத்திடம் இது தொடர்பான விளக்கங்களை அளிக்குமாறு கூறினர். இன்று, இந்திய பட்டயக் கணக்காளர் மையம் சார்பில் அளிக்கப்பட்ட விளக்கத்தில், கரோனாவால் பாதிக்கப்பட்ட தேர்வர்களுக்கு என தனி தேர்வு மையம் அமைக்க இயலாது. இது மற்ற தேர்வர்களையும் பாதிப்பிற்கு உள்ளாகும்.

பட்டயக் கணக்காளர்கள் தேர்வு மற்ற தேர்வு முறைகளிலிருந்து வேறுபட்டு காணப்படுவதால் தற்போது ஆன்லைன் முறையில் தேர்வுகளை நடத்த இயலாத சூழல் நிலவுகிறது எனத் தெரிவித்தது.

இதையடுத்து, இந்திய பட்டயக் கணக்காளர் மையம் அளித்த இந்த விளக்கத்தை அதன் இணையதள பக்கத்தில் வெளியிடுமாறும், கரோனா அச்சுறுத்தல் காரணமாக இதுவரை எடுத்த நடவடிக்கைகளை மாணவர்களுக்கு தெரிவிக்குமாறும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.