ETV Bharat / bharat

காஷ்மீர் சிறார்கள் சட்டவிரோதமாக சிறையில் அடைக்கப்படவில்லை - உச்ச நீதிமன்றம் - காஷ்மீர் சிறார்கள் சிறை

டெல்லி: காஷ்மீரைச் சேர்ந்த சிறார்கள் சட்டவிரோதமாகச் சிறையில் அடைக்கப்படவில்லை என்பது உறுதியாகியுள்ளதாக உச்ச நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.

JK
JK
author img

By

Published : Dec 13, 2019, 7:19 PM IST

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்திற்கு அளிக்கப்பட்டுவந்து சிறப்புத் தகுதி நீக்கப்பட்டதைத் தொடர்ந்து, அங்கு இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. ஆனால், இதனை மத்திய அரசு மறுத்துவந்தது. பல பத்திரிகைகள் அங்கு மனித உரிமைகள் மீறப்படுவதாக செய்திகள் வெளியிட்டுவந்தன.

முக்கியமாக, சிறார்களைக் காவல் துறையினர் கைது செய்துவைத்துள்ளதாகச் சமூக செயற்பாட்டாளர்கள் குற்றஞ்சாட்டினர். இந்நிலையில், குழந்தைகள் உரிமை அமைப்பைச் சேர்ந்த இனாக்சி கங்குலி, சாந்தா ஆகியோர் இது குறித்து உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர். குழந்தைகள் சட்டவிரோதமாகக் கைது செய்வது குறித்த அறிக்கையை ஜம்மு - காஷ்மீர் உயர் நீதிமன்றம் தாக்கல் செய்யும்படி உச்ச நீதிமன்றம் கேட்டுக்கொண்டது.

ஜம்மு - காஷ்மீர் உயர் நீதிமன்றத்தின் சிறுவர் நீதிக்குழு உச்ச நீதிமன்றத்தில் அறிக்கை ஒன்றை தாக்கல் செய்துள்ளது. அதில், ஒன்பது வயது சிறுவன் உள்பட 144 சிறார்களைக் காவல் துறையினர் சட்டவிரோதமாகக் கைது செய்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது. இருவரை தவிர மற்ற அனைவரும் அன்றே விடுவிக்கப்பட்டுவிட்டதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, ஜம்மு-காஷ்மீர் உயர் நீதிமன்றத்தைச் சேர்ந்த நான்கு நீதிபதிகள் அம்மாநிலத்தின் அனைத்து சிறைகளுக்கும் சென்று ஆய்வு மேற்கொண்டு அறிக்கை தயாரித்தனர்.

உச்ச நீதிமன்றத்தில் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்ட நிலையில், சிறார்களில் ஒருவர்கூட தற்போது சிறையில் அடைக்கப்படவில்லை என்பது அறிக்கையின் மூலம் உறுதியாகியுள்ளது. நமது நீதிபதிகளை நாமே நம்பவில்லை என்றால் சரியாக இருக்காது என நீதிபதி என்.வி. ரமணா தெரிவித்துள்ளார். இந்த அறிக்கைக்கு பதிலளிக்க நேரம் கேட்டு மனுதாரர் தரப்பு உச்ச நீதிமன்றத்தில் கோரிக்கைவிடுத்தது.

அறிக்கையில் குறைகள் ஏதேனும் இருந்தால் சம்பந்தப்பட்ட அமைப்பை அணுகுமாறு மனுதாரர் தரப்புக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதையும் படிங்க: நாடாளுமன்ற தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு மரியாதை!

ZCZC
PRI GEN LGL NAT
.NEWDELHI LGD24
SC-KASHMIR
Satisfied with HC Juvenile Justice Committee report saying no detention of minors in J&K, says SC
          New Delhi, Delhi 13 (PTI) The Supreme Court Friday said it is satisfied with the report of Juvenile Justice Committee of Jammu and Kashmir HC which had said that no minors have been detained in jails there post abrogation of provisions of Article 370 in the erstwhile state.
          The apex court, after perusing the committee's report, said that four high court judges have visited all the jails in J&K and they have clearly stated that no minors have been illegally detained there.
          A bench, headed by Justice N V Ramana, said that it would not be proper if the court does not believe its own judges.
          The bench said this when senior advocate Huzefa Ahmadi, appearing for petitioner Enakshi Ganguly who has alleged that minors were detained there post abrogation of provisions of Article 370, insisted that he should be given time to respond to the committee's report.
          The bench granted liberty to the petitioners to approach the appropriate forum if they have any grievance over alleged detention of minors in Jammu and Kashmir. PTI ABA MNL LLP
SA
12131414
NNNN
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.