டெல்லி பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் கிலானி தனது கடைசி மூச்சை இன்று மாலை நிறுத்திக்கொண்டார். 2001ஆம் ஆண்டு இந்திய நாடாளுமன்றம் மீது தாக்குதல் நடந்தது.
இந்தத் தாக்குதலுக்கு மூளையாகச் செயல்பட்ட அப்சல் குரு, பேராசிரியர் கிலானி ஆகியோருக்கு நீதிமன்றம் மரண தண்டனை விதித்தது.
இந்த நிலையில் கிலானி 2003ஆம் ஆண்டு டெல்லி உயர் நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டார். போதிய ஆதாரங்கள் இல்லாததால் நீதிபதி, கிலானியை விடுவித்தார்.
இதற்கிடையில் 2016ஆம் ஆண்டு கிலானி அப்சல் குருவுக்கு ஆதரவாக நிகழ்ச்சி ஒன்றுக்கு ஏற்பாடு செய்தார். இதையடுத்து அவர் மீது தேசதுரோக வழக்கு பதியப்பட்டது. இந்த நிலையில் இன்று மாலை கிலானி மாரடைப்பு காரணமாக காலமானார்.
இதையும் படிங்க: ஜம்மு காஷ்மீரில் நாட்டு வெடிகுண்டு வீச்சு