கன்னட திரையுலகில் போதைப்பொருள் அதிகளவில் புழக்கத்தில் உள்ளதாக எழுந்த குற்றச்சாட்டுகள் குறித்து மத்திய குற்றப்பிரிவு அலுவலர்கள் (சிசிபி) விசாரணை நடத்தி வருகின்றனர்.
இது தொடர்பாக, ஏற்கனவே போக்குவரத்து துறையில் பணிபுரியும் ரவிசங்கர் என்பவரும் நடிகை ராகினி திவேதியும் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில், பெங்களூரு இந்திரா நகரில் தங்கியிருந்த ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த பிரசாந்த் ரங்கா என்பவரை மத்திய குற்றப்பிரிவு அலுவலர்கள் இன்று (செப்டம்பர் 6) கைது செய்துள்ளனர்.
தனியார் நிதி நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வரும் அவருக்கு போதைப்பொருள் வழக்கில் தொடர்பு இருப்பதாக கிடைத்த தகவலின் பேரில் மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் அவரை கைது செய்தனர். இதற்கிடையில், ஆகஸ்ட் 8, 2018 அன்று, டெல்லியில் சிசிபி காவல்துறையினரால் கைது செய்யப்பட்ட வீரன் கன்னா, மீது கபன் பார்க் காவலர்கள் வழக்குப் பதிவு செய்தனர்.
ராகினி திவேதி, தமிழில் நடிகர் ஜெயம் ரவியுடன் "நிமிர்ந்து நில்" திரைப்படத்தில் நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது