ETV Bharat / bharat

ஹேண்ட் வாஷ் செய்ய உங்களுக்கு நினைவூட்ட வேண்டுமா! - அப்போ இந்த வாட்ச கட்டிக்கோங்க! - சாம்சங் ஸ்மார்ட் வாட்ச்

கிருமி தொற்றிலிருந்து தப்பிக்க கைகளைச் சுத்தமாகக் கழுவ நினைவூட்டும் ’ஸ்மார்ட் கேலக்ஸி’ (Samsung Galaxy Watch) கைக்கடிகாரத்தை சாம்சங் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.

Samsung
Samsung
author img

By

Published : Apr 18, 2020, 12:32 PM IST

உலக நாடுகளை அச்சுறுத்திவரும் கரோனா வைரஸ் தாக்கம் காரணமாக மக்கள் அனைவரும் பீதியில் உள்ளனர். வைரஸ் தொற்றிலிருந்து மக்கள் தங்களை தற்காத்துக்கொள்ள கிருமிநாசினி கொண்டு கைகளைச் சுத்தமாகக் கழுவ வேண்டும், வெளியில் செல்லும்போது முகக்கவசம் அணிந்துகொண்டு செல்ல வேண்டும் என அறிவுறத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் பெங்களூருவைச் சேர்ந்த சாம்சங் ரிசர்ச் இன்ஸ்டிடியூட் ‘ஹேண்ட் வாஷ் ஆப்’ என்ற புதிய வசதியைக் கொண்ட ஸ்மார்ட் கேலக்ஸி கைக்கடிகாரத்தை உருவாக்கியுள்ளது. இந்தக் கைக்கடிகாரத்தின் சிறப்பு என்னவென்றால், இதன் பயனர்களுக்கு அவ்வப்போது கை கழுவுதல் பற்றி நினைவூட்டுகிறது.

  • Engineers at our R&D centre #Bengaluru have developed a 'Hand Wash' app to help you monitor daily hand hygiene in these times. If you don't want to sing, no worries, the app will manage those 20 seconds. Download from #GalaxyStore now: https://t.co/E9CX0NymLE

    — SamsungNewsroomIN (@SamsungNewsIN) April 17, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

ஒவ்வொரு முறையும் கைகளைக் கழுவும்போது 25 விநாடிகள் தொடர்ந்து கைகளைக் கழுவ இந்தக் கேலக்ஸி கைக்கடிகாரம் அவர்களுக்கு நினைவூட்டுகிறது. சாம்சங் கேலக்ஸி ஸ்டோர்களில் இந்த ஸ்மார்ட் கேலக்ஸி வாட்ச் கிடைக்கும் என சாம்சங் அறிவித்துள்ளது.

முன்னதாக கரோனா தொற்றிலிருந்து அனைவரும் தங்களைப் பாதுகாத்துக்கொள்ள தொடர்ந்து 20 விநாடிகள் கிருமிநாசினி கொண்டு கைகளைக் நன்றாகக் கழுவ வேண்டும் என உலக சுகாதார நிறுவனம் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:குழந்தைகளுக்காக கூகுள் பிளே ஸ்டோரில் வருகிறது புதிய வசதி!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.