ETV Bharat / bharat

சமாஜ்வாதி முக்கிய நிர்வாகி படுகொலை; உடலை ஒப்படைக்க மறுக்கும் நக்சல்கள்!

ராய்பூர்: சமாஜ்வாதி கட்சியின் முக்கிய நிர்வாகியாக வலம்வந்த சந்தோஷ் புனெம் என்பவர் நக்சல்களால் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

samajvadi
author img

By

Published : Jun 19, 2019, 4:44 PM IST

சத்தீஸ்கர் மாநிலத்தின் பிஜாபூர் சட்டப்பேரவைத் தொகுதியில் சமாஜ்வாதி கட்சியின் சார்பாக கடந்த முறை போட்டியிட்டு தோல்வி அடைந்தவர், சந்தோஷ் புனெம். பிஜாபூர் மாவட்டத்தின் சமாஜ்வாதி முக்கிய நிர்வாகியாக வலம்வந்த இவர், ரியல் எஸ்டேட் தொழிலிலும் ஈடுபட்டுவந்தார்.

இந்த நிலையில், நேற்று (செவ்வாய்கிழமை) மாலை சந்தோஷை கடத்திச் சென்ற நக்சல்கள், அவரைப் படுகொலை செய்துள்ளனர். இது குறித்து தகவல் அறிந்து அவரின் உடலை பெறுவதற்காக சென்ற அவரது உறவினர்களையும் நக்சல்கள் தடுத்து நிறுத்தியுள்ளனர்.

கொலை செய்யப்பட்ட சந்தோஷ் புனெம்
கொலை செய்யப்பட்ட சந்தோஷ் புனெம்

இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திவ்யங் படேல், கட்டுமான பணிகளை பார்வையிடச் சென்ற சந்தோஷை நக்சல்கள் கடத்திச் சென்று கொலை செய்திருப்பதாகவும், உடலை மீட்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையே, சந்தோஷ் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அம்மாவட்டம் முழுவதும் தீயாக பரவியதையடுத்து, அங்கு பதற்றமான நிலை நீடித்துவருகிறது.

Intro:Body:தஞ்சாவூர் தமிழ் பல்கலைக் கழக துணைவேந்தராக பாலசுப்பிரமணியன் நியமிக்கப்பட்டது செல்லும் என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

தஞ்சாவூர் தமிழ் பல்கலைக் கழகத்திற்கு துணைவேந்தரை தேர்வு செய்ய, சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஜெயசந்திரன் தலைமையில் தேர்வுக் குழு அமைக்கப்பட்டது. இந்த பதவிக்கு 35 பேர் விண்ணப்பித்த நிலையில் பாலசுப்ரமணியன், கணேசன் மற்றும் ராமமூர்த்தி ஆகியோரை தேர்வு செய்து, பல்கலைக் கழகங்களின் வேந்தரான ஆளுனருக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

மூவரிடமும் நேர்முகத் தேர்வு நடத்திய ஆளுனர், பாலசுப்ரமணியனை நியமிக்க உத்தரவிட்டார். அதன் அடிப்படையில், அவரை தமிழ் பல்கலைக் கழகத்தின் துணைவேந்தராக நியமித்து தமிழக அரசு கடந்த 2018 அக்டோபர் மாதம் உத்தரவு பிறப்பித்தது.

இந்த உத்தரவை ரத்து செய்யக் கோரியும், முறையாக தேர்வு நடைமுறைகளை மேற்கொண்டு தகுதியான நபரை துணைவேந்தராக நியமிக்க கோரியும், தேர்வில் கலந்து கொண்ட கணேசன் உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார்.

இந்த மனு, நீதிபதி பார்த்திபன் முன் விசாரணைக்கு வந்த போது, சர்வதேச அளவில் கருத்தரங்குகளை நடத்திய அனுபவம் பெற்றிருக்க வேண்டும் என்ற தகுதியை பாலசுப்பிரமணியன் பூர்த்தி செய்யவில்லை என மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது.

ஆனால், ஆந்திராவில் பாலசுப்ரமணியன் கருத்தரங்கு நடத்தியதாகவும், அதில் சர்வதேச அளவில் இருந்து தமிழறிஞர்கள் கலந்து கொண்டதால் அது சர்வதேச கருத்தரங்கு தான் என, தேர்வுக் குழு சார்பில் ஆஜரான அரசு தலைமை வழக்கறிஞர் தெரிவித்தார்.

இந்த வாதத்தை ஏற்றுக் கொண்ட நீதிபதி, அனைத்து தகுதிகளையும் ஆராய்ந்த பிறகே பல்கலைக் கழக வேந்தர் இந்த நியமன உத்தரவை பிறப்பித்துள்ளார். அதனால் பாலசுப்ரமணியத்தின் நியமனத்தை ரத்து செய்ய முடியாது என உத்தரவிட்டு கணேசன் தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.