சபரிமலை கோயிலுக்குள் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க வேண்டும் என்று 2018ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இந்தத் தீர்ப்புக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் சென்ற ஆண்டில் 56 மறு ஆய்வு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
இந்த மறு ஆய்வு மனுக்கள் தொடர்பான வழக்கை, அரசியல் சாசன அமர்வு விசாரிக்கும் என்று 2019ஆம் ஆண்டு இறுதியில் ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வு தீர்ப்பளித்தது.
இந்நிலையில், இந்த வழக்கை விசாரிக்க தற்போது ஒன்பது பேர் கொண்ட அரசியல் சாசன அமர்வு அமைக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த வழக்கு தொடர்பான விசாரணை வரும் ஜனவரி 13ஆம் தேதி முதல் தொடங்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: மும்முனை போட்டியை நோக்கிச் செல்லும் டெல்லி?