ஆண்களின் ஆதிக்கத்தில் உள்ள இந்திய விமானப் படையில் பெண்கள் பல்வேறு சாதனைகளை படைத்துவருகின்றனர்.
அந்த வகையில், இந்திய விமானப் படையில் விங் கமாண்டராக பணியாற்றிவந்த ஷாலிஸா தாமி, தற்போது பிளைட் கமாண்டராக நியமிக்கப்பட்டுள்ளார்.
அதன்படி, இந்திய விமானப்படையின் முதல் பெண் பிளைட் கமாண்டர் என்ற பெருமையை ஷாமிஸா தாமி பெற்றுள்ளார்.
இந்தியா விமானப் படையில் கடந்த 15 ஆண்டுகளாக பணியாற்றிவரும் தாமி, சீடாக், சீடா ஆகிய ஹெலிகாப்டர்களின் முதல் பெண் பிளையிங் இன்ஸ்ட்ரக்டர் என்பது குறிப்பிடத்தக்கது.