போபால்: நாட்டில் நிலவும் தற்போதைய சூழல்கள் குறித்து ஆர்எஸ்எஸ் அமைப்பு சார்பில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் தலைமையில் இந்தக் கூட்டம் நடைபெற்றது. இதில் ராமர் கோயில் பூமி பூஜை குறித்து விவாதிக்கப்பட்டது. மேலும், சீனப் பொருள்களைத் தவிர்க்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது. அதுமட்டுமில்லாமல், கரோனா காலத்தில் நாட்டில் நிலவும் சூழல்களைக் கருத்தில்கொண்டு செயல்பட வேண்டும் என்று கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது.