உலகளாவிய அச்சுறுத்தலான கரோனா வைரஸ் பாதிப்பால் பெரும் நெருக்கடிக்குள்ளாகி இருக்கும் மத்தியப் பிரதேசத்தில் விஸ்வ இந்து பரிஷத் அமைப்பினர் தன்னார்வ பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். அம்மாநிலம் முழுவதும் மேற்கொள்ளப்பட்ட பணிகள் குறித்து அறிந்துகொள்ளவும், ஆலோசனைகளை வழங்கவும் இரண்டு நாள் கலந்தாய்வுக் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
தலைநகர் போபாலில் நடைபெறும் இந்த கூட்டத்தில் விஸ்வ இந்து பரிஷத்தின் உயர் தலைவர்கள் கலந்துகொள்வார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. அயோத்தியில் ராமர் கோயில் கட்டப்பட்டு வரும் பின்னணியில் நடைபெற்று வரும் கூட்டத்தின் உண்மையான நிகழ்ச்சி நிரலை பகிர்ந்து கொள்ள அவ்வமைப்பு மறுத்துள்ளது.
காங்கிரஸ் ஆட்சி கவிழ்க்கப்பட்டத்தை தொடர்ந்து கட்சித் தாவிய 24 எம்.எல்.ஏ.க்கள், உயிரிழந்த 2 எம்.எல்.ஏ.க்கள் என மொத்தம் 26 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் இந்த கூட்டம் நடைபெறுவது கவனிக்கத்தக்கது.