புதுச்சேரி மாநில துணைநிலை ஆளுநர் கிரண்பேடி, அம்மாநில தேர்தல் ஆணையராக ஓய்வுபெற்ற ஐ.எப்.எஸ். அலுவலர் ராய் பி.தாமஸை நியமனம் செய்துள்ளார்.
அதற்கான உத்தரவை அரசு சார்பு செயலாளர் கிட்டி பல்ராம் பிறப்பித்துள்ளார். அதன்படி ராய் பி.தாமஸ் தேர்தல் ஆணையராக மூன்று ஆண்டுகள் பணியில் இருப்பார்.
புதுச்சேரி அமைச்சரவையில் மாநில தேர்தல் ஆணையராக ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ் அலுவலர் பாலகிருஷ்ணனை நியமிக்க முடிவெடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: "பண்டிகை காலங்களில் மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும்" - கிரண்பேடி!