ETV Bharat / bharat

700 செல்போன் எண்களிலிருந்து விமான பணிப்பெண்ணுக்கு பாலியல் தொல்லை அளித்த நபர் கைது

டேராடூன் : 700 செல்போன் எண்களில் இருந்து விமான பணிப்பெண்ணுக்கு ஆபாசக் குறுஞ்செய்திகள் அனுப்பிய பிடெக் மாணவர் கைது செய்யப்பட்டார்.

harassing air hostess
harassing air hostess
author img

By

Published : Oct 9, 2020, 8:01 PM IST

உத்ராகண்ட் மாநிலம், ரூர்க்கி பகுதியைச் சேர்ந்த அபிஜித் என்பவர், அப்பகுதி காவல் நிலையத்தில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் புகார் ஒன்று அளித்தார். அதில் தனது மகள் விமான பணிப்பெண்ணாக உள்ளார் எனவும், அவருக்கு வெவ்வேறு செல்போன் எண்களில் இருந்து ஆபாசக் குறுச்செய்திகள் வருவதாகவும் குறிப்பிட்டார்.

அந்தப் புகாரின் அடிப்படையில் காவல் துறையினர் விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் இந்த வழக்கு தொடர்பாக பரேலி பகுதியைச் சேர்ந்த பிடெக் மாணவர் ரோஹித் சக்சேனா என்பவர் கைது செய்யப்பட்டார்.

இது குறித்து காவல் துறையினர் கூறுகையில், "இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு பாதிக்கப்பட்ட விமானப் பணிப்பெண்ணும், அவரது நண்பரும் பரேலி ரயில் நிலையத்தில் டிக்கெட் முன்பதிவு செய்துள்ளனர். அப்போது குற்றவாளி ரோஹித்தின் தந்தை பரேலி ரயில் நிலையத்தில் பணிபுரிந்துள்ளார்.

அதனைப் பயன்படுத்திக்கொண்ட ரோஹித், தனது தந்தைக்குத் தெரியாமல் விமானப் பணிப்பெண்ணின் செல்போன் எண்ணை எடுத்துக்கொண்டு அவரைத் தொடர்புக் கொண்டு தன்னை திருமணம் செய்துகொள்ளுமாறு கேட்டுள்ளார்.

ஆனால் அப்பெண் மறுப்பு தெரிவிக்கவே, அவருக்கு ஆபாசமாகவும் மிரட்டல் விடுத்தும் குறுஞ்செய்திகள் அனுப்பி உள்ளார். அத்துடன் 700 வெவ்வேறு எண்களிலிருந்தும் குறுஞ்செய்தி அனுப்பியுள்ளார்" எனத் தெரிவித்தனர்.

இதையும் படிங்க: உத்ரகாண்டில் ஊழல் மலிந்துவிட்டதாக பாஜக எம்எல்ஏ விமர்சனம்!

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.