ரயில்களில் செல்லும் பயணிகளிடம் மயக்க மருந்து கலந்த சாக்லேட்டுகளை கொடுத்து சிலர் திருட்டில் ஈட்டுபட்டு வருவதாக சமீப காலமாகக் காவல் துறையினருக்கு பல்வேறு புகார்கள் வந்த வண்ணம் உள்ளது. அதிலும் குறிப்பாக நிஜாமுதீன் எக்ஸ்பிரஸ் ரயிலில் இச்சம்பவம் அதிகமாக நடைபெறுவதாகக் கூறப்படுகிறது.
அதனடிப்படையில் ரயில்வே காவல் துறையினர் மயக்க மருந்து கலந்த சாக்லேட்டுகளை கொடுத்து திருடி செல்லும் கும்பலைத் தீவிரமாகத் தேடி வந்த நிலையில், இன்று பெல்காம் ரயில் நிலையத்தில் அந்த கும்பலை சேர்ந்த முகமது முக்தர், ஷாபாத் மற்றும் ஆலம் ஆகியோர் பிடிபட்டனர்.
இதையடுத்து அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், இரண்டு அணிகளாகப் பிரிந்து, திருட்டில் ஈட்டுப்பட்டு வந்தது தெரியவந்தது. மேலும் ஒரு கும்பல் ஏற்கனவே காவல்துறையினரின் வலையில் விழுந்த நிலையில், மற்றொரு அணியை ரயில்வே காவல் துறையினர் தேடி வருகின்றனர்.