ETV Bharat / bharat

ஆர்ஜேடி மூத்தத் தலைவர் சிவானந்த் திவாரிக்கு காங்கிரஸ் பதில்...! - சிவானந்த் திவாரிக்கு காங்கிரஸ் பதில்

பிகார் சட்டப்பேரவைத் தேர்தலில் மகா கூட்டணியின் தோல்விக்கு காங்கிரஸ் கட்சிதான் முக்கியக் காரணம் என கருத்துக் கூறிய ஆர்ஜேடி மூத்தத் தலைவர் சிவானந்த் திவாரிக்கு காங்கிரஸ் காட்டமான பதிலை வழங்கியுள்ளது.

rjd-veteran-shivanand-tiwari-stirs-hornets-nest-with-rahulscriticism-cong-hits-back

author img

By

Published : Nov 16, 2020, 8:50 PM IST

பிகார் சட்டப்பேரவைத் தேர்தலில் ஆர்ஜேடி - காங்கிரஸ் கூட்டணி இணைந்து தேர்தலை எதிர்கொண்டது. அதில் காங்கிரஸ் கட்சி சார்பாக போட்டியிட்ட 70 தொகுதிகளில் 19 தொகுதிகளில் மட்டுமே வெற்றிபெற்றது. இதனால் ஆர்ஜேடி கூட்டணியின் தோல்விக்கு காங்கிரஸ் கட்சி காரணம் என்ற விமர்சனம் வைக்கப்பட்டுவருகிறது.

இதனிடையே தொலைக்காட்சி விவாதத்தின்போது ஆர்ஜேடியின் மூத்தத் தலைவர் சிவானந்த் திவாரி, மகா கூட்டணியின் தோல்விக்கு காங்கிரஸ்தான் காரணம் என வெளிப்படையாகவே பேசினார். அதுமட்டுமல்லாமல், ராகுல் காந்தியின் பிகார் சுற்றுப்பயணத்தின்போது ஒருநாளைக்கு இரண்டு பேரணிகளில்தான் பங்கேற்றார். பிரியங்கா காந்தி எங்கு சென்றார் என்றே தெரியவில்லை.

அதுமட்டுமல்லாமல், தேர்தல் பரப்புரை உச்சத்தில் இருந்தபோது, பிரியங்கா காந்தியுடன் ராகுல் சுற்றுலாவில் இருந்தார் என விமர்சனம் செய்தார்.

இதற்கு காங்கிரஸ் செய்தித்தொடர்பாளர் பிரேம் சந்திரா கூறுகையில், ''ஆர்ஜேடி கட்சியின் அதிகாரப்பூர்வ செய்தித் தொடர்பாளராக சிவானந்த் திவாரி இல்லை. அவர் விரைவாக பாஜக அல்லது ஜேடியூ கட்சியில் இணையவுள்ளார்.

மத்திய அமைச்சர் ஜிரிராஜ் சிங்குடன் அவர் தொடர்ந்து பேசிவருகிறார். கூட்டணி தர்மம் என்று உள்ளது. அதனை அனைவரும் மதிக்க வேண்டும்'' எனப் பதிலளித்தனர்.

இதன்பின்னர் ஆர்ஜேடி சார்பாக சிவானந்த் திவாரியின் கருத்து கட்சியின் கருத்தல்ல. அது அவருடைய சொந்த கருத்து என விளக்கமளிக்கப்பட்டது.

இதையும் படிங்க: ஏழாவது முறை பிகார் முதலமைச்சராக பதவியேற்றார் நிதிஷ்குமார்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.