ETV Bharat / bharat

பிகாரில் வெள்ள அபாயம் - அலுவலர்களுடன் தீவிர ஆலோசனையில் நிதிஷ் குமார் - பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்புப் பணி

பாட்னா: நேபாளத்திலுள்ள வால்மீகி தடுப்பணையிலிருந்து நீர் திறந்துவிடப்படுவதாலும், அதிகரிக்கும் மழையினாலும் பிகாரில் வெள்ளப் பெருக்கு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

rising-water-level-of-gandak-river-threatens-flood-in-bihar

author img

By

Published : Jul 21, 2020, 10:36 PM IST

பிகாரில் கனமழை பெய்துவரும் சூழலில், நேபாளம் வால்மீகி அணையிலிருந்து பிகாரிலுள்ள கந்தக் தடுப்பணைக்கு தொடர்ந்து நீர் வெளியேற்றப்படுகிறது. முன்னதாக அணையை பழுது பார்ப்பதற்கும் நேபாள அரசு ஒத்துழைப்பு அளிக்காததால், பிகார் வெள்ளத்தில் மூழ்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக ஊடகங்கள் தெரிவித்துவருகின்றன.

தற்போது கந்தக் தடுப்பணையில் உள்ள நீர் முழு கொள்ளளவை கடந்துள்ளதால், வெள்ள அபாயத்தில் மாநிலம் உள்ளது உறுதிபடுத்தப்பட்டுள்ளது. இதையடுத்து, முதலமைச்சர் நிதிஷ் குமார், தாழ்வான பகுதிகளில் வசித்துவரும் மக்கள், வெள்ள பாதிப்பு ஏற்பட்டுள்ள பகுதிகளில் வசிக்கும் மக்களை காப்பது குறித்து மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.

இந்தியா-நேபாள எல்லைக்கு அருகிலுள்ள எல்லைப்புறக் காவல் முகாம் உள்ளிட்டவை ஐந்து அடி கந்தக் வெள்ளநீரில் மூழ்கியுள்ளன. இதையடுத்து மக்களை பாதுகாப்பான பகுதிகளுக்கு மாற்ற முதலமைச்சர் நிதிஷ் குமார் உத்தரவிட்டுள்ளார்.

மேலும், அனைத்து மாவட்ட நீதிபதிகள், அரசு அலுவலர்களும் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு சென்று நிலைமையை கண்காணிக்குமாறும் கேட்டுக் கொண்டுள்ளார்.

பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உடனடி நிவாரணப் பொருள்களை வழங்கவும், பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்புப் பணிகளை மேற்கொள்ளவும் தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்புக் குழுக்கள் வரவழைக்கப்பட்டுள்ளன.

நேபாளம் மற்றும் கந்தக் ஆற்றின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் அதிக மழை பெய்ய வாய்ப்புள்ள நிலையில், பேரிடர் மேலாண்மை துறை அலுவலர்கள் மற்றும் மாவட்ட அலுவலர்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று முதல்வர் நிதிஷ்குமார் கேட்டுக் கொண்டுள்ளார்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.