ETV Bharat / bharat

நாட்டில் அதிகரிக்கும் கலவரத்தின் வீரியம்: வெளியான அதிர்ச்சி தகவல்!

author img

By

Published : Oct 22, 2019, 9:39 PM IST

டெல்லி: நாட்டில் கலவரங்கள் குறைந்தாலும் அதன் வீரியத்தன்மை பன்மடங்கு அதிகரித்துள்ளதாக தேசிய குற்ற ஆவண காப்பகம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Riots

2017ஆம் ஆண்டு நடந்த குற்றங்கள் குறித்த அறிக்கையை தேசிய குற்ற ஆவண காப்பகம் நேற்று வெளியிட்டது. இதில், கலவரங்கள் குறைந்துள்ளதாகவும் அதே சமயம் அதன் வீரியம் பன்மடங்கு அதிகரித்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. நாடு முழுவதும் தினமும் 161 கலவர வழக்குகள் பதிவு செய்யப்படுவதாகவும் ஒரு கலவரத்தில் தோராயமாக 247 பேர் பாதிக்கப்படுவதாகவும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

கலவரத்தில் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை 2016ஆம் ஆண்டைக் காட்டிலும் 2017ஆம் ஆண்டு 22 விழுக்காடு அதிகரித்துள்ளதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், கலவரம் 2016ஆம் ஆண்டைக் காட்டிலும் 2017ஆம் ஆண்டு ஐந்து விழுக்காடு குறைந்துள்ளது.

2017ஆம் ஆண்டு நாடு முழுவதும் 58 ஆயிரத்து 880 கலவரங்கள் நடைபெற்றுள்ளன. இந்தக் கலவரங்களில் 90 ஆயிரத்து 394 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மதம், நிலம், சாதி, அரசியல் என பல்வேறு காரணங்களால் கலவரங்கள் நடைபெற்றுள்ளன. நாட்டில் பிகாரில்தான் அதிக கலவரங்கள் நடைபெறுவதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிகார் - 11 ஆயிரத்து 698 கலவரங்கள்
உத்தரப் பிரதேசம் - எட்டாயிரத்து 990 கலவரங்கள்
மகாராஷ்டிரா - ஏழாயிரத்து 743 கலவரங்கள்

இதையும் படிங்க: குற்றச் செயல்களில் உ.பி, முதலிடம் வெட்கக்கேடு - பிரியங்கா காந்தி சாடல்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.