குடியுரிமை திருத்தச் சட்டம் தொடர்பாக டெல்லியில் நடைபெற்ற போராட்டம் கடந்த மூன்று நாள்களாக வன்முறையாக மாறியது. இந்த வன்முறையில் தலைமைக் காவலர் ரத்தன் லால், உளவுப் பிரிவு பணியாளர் 26 வயதான அன்கித் சர்மா உள்பட 38 பேர் உயிரிழந்துள்ளனர். காயமடைந்த 200-க்கும் மேற்பட்டோர் சிகிச்சைப் பெற்றுவருகின்றனர். அதில் செய்தி சேகரிக்கச் சென்ற தனியார் செய்தி நிறுவன செய்தியாளருக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது.
இந்நிலையில் டெல்லி வன்முறை குறித்து ஹரியானா அமைச்சர் ரஞ்சித் சவுதாலா சர்ச்சை கருத்தைத் தெரிவித்துள்ளார். அதில், ”டெல்லிக்கு கலவரம் ஒன்றும் புதிதல்ல. 1984ஆம் ஆண்டு இந்திரா காந்தி கொல்லப்பட்டபோது, சீக்கிய எதிர்ப்புக் கலவரம் நிகழ்ந்து. டெல்லிக்கு வன்முறை என்பது வாழ்வின் ஒரு பகுதியாகிவிட்டது” எனக் கூறினார்.
இதையும் படிங்க...கோரேகான் பீமா: இதுவரை 348 வழக்குகள் திரும்பப் பெறப்பட்டுள்ளன