புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்தப் போராட்டங்கள் காரணமாக டெல்லியில் இயல்பு வாழ்க்கை மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. மேலும், விவசாயிகளின் போராட்டம் காரணமாக தலைநகரில் கரோனா பரவல் அதிகரிக்கலாம் என்று கருத்துகள் பரவி வந்த நிலையில், அதற்கு நேர்மாறாக கடந்த சில நாள்களாகவே டெல்லியில் கரோனா பரவல் தொடர்ந்து குறைந்து வருகிறது.
இந்நிலையில், தற்போது நடைபெற்று வரும் போராட்டங்களால், அம்மாநிலத்தில் கரோனா பரவல் குறைந்துள்ளதாக டெல்லி ராஜிவ் காந்தி மருத்துவமனையில் ஒப்புதல் அலுவலராக உள்ள மருத்துவர் அஜித் ஜெயின் தெரிவித்துள்ளார். இது குறித்து பேசிய அவர், "தற்போது இங்கு போராடும் விவசாயிகள் டெல்லியின் அனைத்து எல்லைகளையும் மூடிவிட்டனர். இதன் மூலம் கரோனா சங்கிலி உடைக்கப்பட்டுள்ளது.
மேலும், அண்மையில் டெல்லியில் நடத்தப்பட்ட செரோ சர்வேயில் மக்கள் தொகையில் கிட்டதட்ட 25 விழுக்காட்டினர் ஏற்கனவே நோய் எதிர்ப்பு சக்தியை பெற்றுவிட்டனர். இத்துடன் தொற்று நோயால் பாதிக்கப்பட்ட மிகக் குறைந்த ஆபத்துள்ளவர்களையும் சேர்த்தால் அது டெல்லி மக்கள் தொகையில் 75 விழுக்காடாக இருக்கும். இதுதான் ஹெர்ட் இம்யூனிட்டி என்று அழைக்கப்படுகிறது.
இப்போது தேவைப்படும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும், முறையான தனிமனித இடைவெளியையும் கடைபிடித்தால் சார்ஸ் மற்றும் மெர்ஸ் போல கரோனாவும் மறைந்து விடும் வாய்ப்புகள் அதிகம் " என்றார்.
இதையும் படிங்க: இந்தியாவில் மாபெரும் போராட்டங்களை எதிர்கொண்ட சட்ட திருத்தங்கள்!