ETV Bharat / bharat

பொருளாதார மந்தநிலைக்கு சிதம்பரம்தான் காரணம்; எழுதிவைத்து தற்கொலை செய்துகொண்ட வீரர்!

லக்னோ: நாட்டில் நிலவும் பொருளாதார மந்தநிலைக்கு காரணம் மத்திய முன்னாள் நிதியமைச்சர் ப. சிதம்பரம்தான் காரணம் என கடிதம் எழுதி வைத்து இந்திய விமானப் படையின் முன்னாள் வீரர் ஒருவர் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

Suicide
author img

By

Published : Sep 9, 2019, 4:43 PM IST

உத்தரப் பிரதேச மாநிலம் அலகாபாத்தில் உள்ள விடுதியில் அஸ்ஸாம் மாநிலத்தைச் சேர்ந்த முன்னாள் இந்திய விமானப் படை வீரர் பிஜன் தாஸ் (55) ஒரு கடிதம் எழுதிவைத்துவிட்டு தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார்.

ப. சிதம்பரம்தான் பொருளாதார மந்தநிலைக்கு காரணம்

அவர் எழுதிய கடிதத்தில், "நாட்டில் நிலவிவரும் பொருளாதார மந்தநிலைக்கு மத்திய முன்னாள் நிதியமைச்சர் ப. சிதம்பரம்தான் காரணம். இதற்கும் மோடி அரசுக்கும் சம்பந்தமில்லை. மோடி அரசை மட்டும் குற்றம் சொல்வது தவறு.

பணமதிப்பிழப்பு, சரக்கு மற்றும் சேவை வரி அமல் ஆகியவை தற்காலிகமான விளைவை ஏற்படுத்தி இருக்கலாம். பொருளாதார மந்தநிலை ஏற்பட்டதால் என் மகனுக்கு என்னால் சிறு உதவிகூட செய்ய முடியவில்லை. என் மகனின் கனவை பிரதமர் மோடி நிறைவேற்ற வேண்டும்" எனக் குறிப்பிட்டிருந்தார்.

அடக்கம் செய்வதற்கு 500... விடுதியில் தங்கியதற்கு 500...!

ஆயிரத்து 500 ரூபாயை உடலை அடக்கம் செய்வதற்காகவும் 500 ரூபாயை விடுதி அறையில் தங்கியதற்காகவும் அப்பணத்தை அவர் கடிதத்துடன் வைத்துவிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

பொருளாதார மந்தநிலைக்கு காரணம் பாஜக அரசின் திட்டங்கள்தானாம்...!

நாட்டின் பொருளாதார மந்தநிலைக்கு பாஜக அரசின் திட்டங்கள்தான் காரணம் என பொருளாதார வல்லுநர்கள் குற்றம்சாட்டிவருவது குறிப்பிடத்தக்கது.

Intro:Body:Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.