தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்திற்குள்பட்ட சைதராபாத்தில் காவல் துறையினர் ஆரஞ்சு பழம் விற்பனை செய்வதற்குத் தடைவிதித்திருப்பதாக ஓய்வுபெற்ற ராணுவ அலுவலர் தனது ட்விட்டர் பக்கத்தில் தவறான கருத்துகளைப் பதிவிட்டுள்ளார்.
அதில், பழைய ஆங்கில நாளேட்டின் செய்தியினையும், மார்ஃபிங் செய்யப்பட்ட காவல் துறையினரின் புகைப்படத்தையும் இணைத்துள்ளார்.
மேலும், ஆரஞ்சு பழம் காவி நிறத்தில் உள்ளதால் இஸ்லாமிய மக்கள் இதனைக் கண்டு மனதளவில் வருத்தமடைவர் என்றே காவல் துறையினர் ஆரஞ்சு பழ விற்பனைக்குத் தடைவிதித்திருப்பதாகவும் அவர் அந்தப் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
இதனைக் கண்ட காவல் துறையினர், இரு மதத்தினருக்கிடையே பிரிவினைகளைத் தூண்டும்விதமாக சமூக வலைதளங்களில் கருத்துகளைப் பதிவிட்டிருப்பதாகக் கூறி இவர் மீது குற்றவியல் பிரிவின்கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இதையும் பார்க்க: 3 லட்சம் பேருக்கு மேல் கைது; 3 கோடி ரூபாய்க்கு மேல் வசூல்!