கர்நாடகாவின் காங்கிரஸ் - மதச்சார்பற்ற ஜனதா தளத்தைச் சேர்ந்த 13 அதிருப்தி சட்டப்பேரவை உறுப்பினர்கள், தங்களின் ராஜினாமா கடிதத்தை சபாநாயகரிடம் அளித்தனர். ஆனால், அதில் எட்டு சட்டப்பேரவை உறுப்பினர்களின் கடிதம் நிராகரிக்கப்படுவதாக சபாநாயகர் ரமேஷ் குமார் அறிவித்தார்.
இந்நிலையில், ராஜினாமா கடிதம் ஏற்கபடாததை எதிர்த்து அதிருப்தி சட்டப்பேரவை உறுப்பினர்கள் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர். அரசியலமைப்பு கடமையை மீறி ராஜினாமா கடிதம் ஏற்க தாமதிக்கப்படுவதாக, அதிருப்தி சட்டப்பேரவை உறுப்பினர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். இந்த வழக்கை உச்ச நீதிமன்றம் நாளை விசாரிக்க உள்ளது.