ஜம்மு காஷ்மீர் மாநிலத்தைப் பிரித்து ஜம்மு காஷ்மீர், லடாக் ஆகிய இரண்டு யூனியன் பிரதேசங்களாக மாற்றி மத்திய அரசு அறிவித்தது. இதற்காக ஜம்மு காஷ்மீர் மாநிலத்திலிருந்து அரசியலமைப்பின் பிரிவு 370 ரத்து செய்யப்பட்டது. இதனால் காஷ்மீர், லடாக் மாநில மக்கள் தங்களின் கலாசாரம், வாழ்வுரிமை பாதிக்கப்படுமோ என்ற அச்சத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.
இச்சூழலில் வடகிழக்கு மாநிலங்களில் உள்ளதைப் போல் அரசியலமைப்பின் 371ஆவது பிரிவின் கீழ் ஜம்மு-காஷ்மீரைக் கொண்டுவரப்போவதாக சமூக வலைதளங்களில் செய்தி பரவி வருகிறது. அப்படிச் செய்தால் ஜம்மு காஷ்மீர், லடாக்கில் நிலம் வாங்க 15 வருடங்கள் அங்கு வசித்திருக்க வேண்டியது கட்டாயம் ஆகிவிடும்.
காஷ்மீர் கட்டுப்பாடுகளை நீக்க வலியுறுத்தி அமெரிக்காவில் மசோதா!
ஆனால் இந்த வதந்தியை திட்டவட்டமாக மறுத்துள்ள மத்திய அரசு, அரசியலமைப்பின் 371ஆவது பிரிவின் கீழ் ஜம்மு-காஷ்மீர் ஒன்றிய பிரதேசத்திற்கும், லடாக் யூடியூக்கும் சிறப்பு அந்தஸ்து வழங்குவதற்கான எந்தவொரு நடவடிக்கையையும் எடுக்கவில்லை என்று தெரிவித்துள்ளது. அதே நேரத்தில் புதிதாக உருவாக்கப்பட்ட இரண்டு யூனியன் பிரதேசங்களுக்கும் குடியேற்ற விதிகளை அறிவிக்கும் நடவடிக்கைகளை வகுத்து வருவதாகத் தெரிவித்துள்ளது.
370 சட்டப்பிரிவு நீக்கப்பட்டதற்குப் பின் ஒருவர்கூட பலியாகவில்லை
மேலும், ஜம்மு காஷ்மீருக்குச் சிறப்பு அந்தஸ்தை மீண்டும் கொண்டு வருவது போன்ற எந்த நடவடிக்கையும் மத்திய அரசு எடுக்கவில்லை. பிரிவு 370-க்கும், பிரிவு 371க்கும் எந்த தொடர்பும் இல்லை என்பதையும் உள்துறை அமைச்சகம் தெளிவுப்படுத்தியுள்ளது.