உத்தரப்பிரதேசத்தில் 14 தொகுதிகள், ஹரியானாவில் 10 தொகுதிகள், பிகார், மேற்கு வங்கம், மத்தியப்பிரதேசத்தில் தலா எட்டு தொகுதிகள், டெல்லியில் ஏழு தொகுதிகள், ஜார்க்கண்டில் 4 தொகுதிகள் என ஏழு மாநிலங்களில் 59 மக்களவைத் தொகுதிகளில் நாளை வாக்குப்பதிவு நடைபெறவிருக்கிறது. இதற்கான தேர்தல் பரப்புரைகளும் நேற்று மாலையுடன் ஓய்ந்தது.
மத்திய அமைச்சர் மேனகா காந்தி. சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ், டெல்லி முன்னாள் முதலமைச்சர் ஷீலா தீட்சித், காங்கிரஸ் மூத்தத் தலைவர் திக்விஜய சிங் ஆகியோர் இத்தேர்தலில் போட்டியிடுகின்றனர்.
டெல்லி கிழக்கு மக்களவைத் தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கிடையே கடும் போட்டி நிலவுகிறது. இத்தொகுதியில் பாஜக சார்பில் கவுதம் கம்பீர், ஆம் ஆத்மி சார்பில் அதிஷி, காங்கிரஸ் கட்சி சார்பில் அரவிந்த் சிங் லவ்லி ஆகியோர் போட்டியிடுகின்றனர்.
ஆறாம் கட்ட வாக்குப் பதிவில் 59 மக்களவைத் தொகுதிகளைச் சேர்ந்த 10.17 கோடி வாக்காளர்கள் வாக்களிக்கவுள்ளனர்.