கரோனா தொற்று பரவலையடுத்து, அனைத்து திரையரங்குகளும் கடந்த 6 மாத காலமாக மூடப்பட்டன. தற்போது பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டாலும், திரையரங்குகளுக்கு மட்டும் அனுமதி வழங்கப்படாமல் இருந்தது.
இந்நிலையில், நாடு முழுவதும் வரும் 15ஆம் தேதி முதல், திரையரங்குகள், மல்டி ஃப்ளெக்ஸ்கள் போன்றவற்றை திறக்க மத்திய உள்துறை அமைச்சகம் அனுமதித்துள்ளதாக மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் இன்று (அக். 6) சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார். அதில் திரையரங்குள் திறப்பதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் என்னென்ன என்பது குறித்து குறிப்பிட்டுள்ளார். அதில்,
- திரையரங்குகளில் 50 விழுக்காடு இருக்கைகளுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
- அனைவரும் மாஸ்க் அணிந்தபடியே திரையரங்கிற்கு வந்து படம் பார்க்க அனுமதிக்க வேண்டும்.
- திரையரங்கிற்குள் சுமார் 24 டிகிரி செல்சியஸ் முதல் 30 டிகிரி செல்சியஸ் அளவில் ஏசியைப் பயன்படுத்தவேண்டும்
- பார்வையாளர்களின் உடல் நிலை வெப்பநிலையைப் பரிசோதித்த பின்னரே திரையரங்கிற்குள் அனுமதிக்கவேண்டும்.
- ஒரு இருக்கை இடைவெளிவிட்டு பார்வையாளர்களை அமர செய்ய வேண்டும்.
- திரையரங்கு உள்ளே உணவு, நொறுக்குத் தீனி வழங்கத் தடை விதிக்கப்படுகிறது.
- ஒவ்வொரு காட்சிக்குப் பிறகும் கிருமி நாசினி தெளிக்க வேண்டும்.
- பார்வையாளர்கள் உடல் வெப்பநிலையைப் பரிசோதனைக்குப் பின்னரே அனுமதிக்க வேண்டும்.
- இடைவேளையின்போது பார்வையாளர்கள் இருக்கையைவிட்டு வெளியே வருவதைத் தவிர்க்க வேண்டும்.
- திரையரங்குகளில் தின்பண்டங்கள் விற்பனை செய்ய அனுமதி இல்லை.
- டிஜிட்டல் முறையிலேயே சினிமா டிக்கெட் விற்பனையை மேற்கொள்ள வேண்டும்.
- திரையரங்க வளாகத்தில் பார்வையாளர்கள் எச்சில் துப்புவதற்தற்கு முற்றிலும் தடை உள்ளிட்ட பல்வேறு விதிகள் அதில் இடம்பெற்றுள்ளன.
இதையும் படிங்க...வாக்குசீட்டு முறையில் நடைபெறும் ஹைதராபாத் பெருநகர மாநகராட்சி தேர்தல்!