ETV Bharat / bharat

பட்ஜெட் 2020: ஆட்டோமொபைல் தொழில்துறை பழைய நிலைக்கு திரும்புமா? - நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்

2020ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று அறிவித்துள்ள நிலையில், ஆட்டோமொபைல் துறை மீண்டும் எப்போது வளார்ச்சி பாதைக்கு திரும்பும் என்பது பற்றிய நிபுணர்களின் கருத்து.

reaction-of-central-budget-bc-dutt-shares-his-views-on-automobile-industry

author img

By

Published : Feb 1, 2020, 11:40 PM IST

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று 2020-21ஆம் நிதியாண்டிற்கான பட்ஜெட்டை தாக்கல் செய்தார். இதுகுறித்து ஹூண்டாய் துணை தலைவர் பிசி தத் நமது ஈடிவி பாரத் ஊடகத்துக்கு அளித்த பேட்டியில், இந்த பட்ஜெட் அனைத்து தரப்பினருக்குமான பட்ஜெட்டாக உள்ளது. விவசாயத் துறைக்கு பெரும் உந்துதலை கொடுக்கும் என எதிர்பார்க்கிறேன். உடான் திட்டம் மூலம் 2024ஆம் ஆண்டுக்குள் நூறு விமான நிலையங்கள் கொண்டு வருவது, ஏற்றுமதியாளர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது. இவையனைத்தும் ஆட்டோமொபைல் தொழிலை வெகுவாக பழைய நிலைக்கு கொண்டுவர பயன்படும். இந்த பட்ஜெட்டின் மூலம் அதிகமான நுகர்வோர் வருவார்கள் என நினைக்கிறேன். ஆட்டோமொபைல் துறை சீராகிவரும் நிலையில், இந்த பட்ஜெட்டில் வெளியாகியுள்ள சில அறிவிப்புகள் ஆட்டோமொபைல் துறையின் வளர்ச்சிக்கு உதவும்.

ஹூண்டாய் துணை தலைவர் பிசி தத்

பல்வேறு தொழிலதிபர்களுக்கும் இந்தியா போன்ற நாடு மிகப்பெரிய ஏற்றுமதிக்கான முக்கிய மையமாக விளங்குகிறது. தற்போது ஏற்றுமதி செய்வோருக்கு என சில சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளது. வருமான வரிக்குறைப்பினால் வெகுவாக நுகர்வோர் மீண்டும் ஷோரூம்களுக்கு திரும்புவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த பட்ஜெட்டில் ஆட்டோமொபைல் தொழிலுக்கு என தனியாக எந்த அறிவிப்பும் வரவில்லை. இந்த நிதியாண்டின் இரண்டாவது குவார்ட்டரில் ஆட்டோமொபைல் தொழில் பழைய நிலைக்கு வரும் என எதிர்பார்க்கிறோம்'' என்றார்.

இதையும் படிங்க: 2020 பட்ஜெட் சிறப்பம்சங்கள் ஒரு பார்வை!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.