கோவிட்-19 வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த நாடு முழுவதும் தற்போது ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. தொழில்துறை முற்றிலும் முடங்கியுள்ளதால், இந்தியப் பொருளாதாரம் பெரும் சரிவைச் சந்தித்துவருகிறது. இதனால் அரசு தங்களுக்கு உதவும் வகையில் திட்டங்களை அறிவிக்க வேண்டும் என்று பல்வேறு துறையினரும் கோரிக்கை விடுத்துவருகின்றனர்.
இந்நிலையில், இன்று காலை 10 மணிக்கு ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ் செய்தியாளர்களைச் சந்திக்கிறார்.
முன்னதாக கடந்த முறை கவர்னர் சக்திகாந்த தாஸ் செய்தியாளர்களை சந்தித்தபோது, ரெப்கோ வட்டி விகிதம் குறைப்பு, இஎம்ஐ செலுத்துவதில் சலுகை உள்ளிட்ட பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: சீனாவிடமிருந்து 5 லட்சம் துரித பரிசோதனை கருவிகள் பெறப்பட்டன