இதுகுறித்து அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், ''இந்த வருடம் அனைவருக்குமே சவால்கள் நிறைந்தாக உள்ளது. சமூகவலைதளங்களில் இருப்பவர்களிடம் எப்போதும் வெறுப்புடன் மற்றவர்களைக் காயப்படுத்தி வருகிறார்கள். அனைத்தையும் முன் தீர்மானத்துடன் அணுகுகிறார்கள்.
இந்த ஆண்டில் நாம் அனைவரும் ஒருங்கிணைந்து ஒற்றுமையாக இருக்க வேண்டிய நிலையில் உள்ளோம். மற்றவர்களுக்கு உதவ வேண்டுமே தவிர, ஒருவருக்கொருவர் வெறுப்பை உமிழ்வதற்கு நேரம் இதுவல்ல.
அனைவரும் மற்றவர்களிடம் கருணையுடனும், புரிதலுடனும், பொறுமையுடனும் இருக்க வேண்டும். சமூக வலைதளத்தில் குறைவாக இருந்தாலும், கஷ்டப்படுபவர்களை நமது இடத்தில் வைத்து பார்ப்பதோடு, அவர்களுக்கு ஆதரவாக இருக்க வேண்டும். விரைவில் மக்களை அனைவருக்கும் சமூக வலைதளம் ஆதரவின் இடமாக உருவாகும் என்று நான் நம்புகிறேன்'' என பதிவிட்டுள்ளார்.