ஜார்க்கண்ட் தலைநகர் ராஞ்சியைச் சேர்ந்தவர் ரிச்சா பாரதி (19). கல்லூரியில் முதலாம் ஆண்டு படிக்கும் இவர், சமீபத்தில் மதவாதத்தைத் தூண்டும் வகையில் சமூக வலைதளத்தில் கருத்து ஒன்றை பதிவிட்டுள்ளார்.
அவரின் கருத்து இஸ்லாமியர்களின் உணர்ச்சிகளை கொச்சைப்படுத்தும் விதமாக அமைந்துள்ளது என அவர் மீது காவல் துறையிரிடம் புகார் அளிக்கப்பட்டது. இந்தப் புகாரின் பேரில் கடந்த சனிக்கிழமை இரவு, ரிச்சா பாரதியை காவல் துறையினர் கைது செய்தனர்.
இதையடுத்து, கைது செய்யப்பட்ட மாணவியை விடுவிக்க வலியுறுத்தி உள்ளூர்வாசிகள், இந்து அமைப்புகள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்நிலையில், இந்த வழக்கின் விசாரணை ராஞ்சியில் உள்ள மாவட்ட நீதிமன்றம் ஒன்றில் நடைபெற்றது. அப்போது, ரிச்சா பாரதி இஸ்லாமிய மத நூலான குரானை வெவ்வேறு அமைப்புகளுக்கு பரிசாக அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்ட நீதிமன்றம், அவரை பிணையில் விடுவித்தது.
இந்தத் தீர்ப்புக்கு, பல்வேறு இந்து அமைப்பினர், பாஜகவினர் கடும் அதிருப்தி தெரிவித்துவருகின்றனர். ட்விட்டரில் #RichaBarthi என்ற ஹேஸ்டேக் வைரலாகிவருகிறது.