மகாராஷ்டிராவில் 50-50 ஆட்சி அதிகாரப் பகிர்வு வேண்டும் என சிவசேனா கட்சியின் தலைவர் உத்தவ் தாக்கரே வலியுறுத்தினார். இதனால் அங்கு சுமுகமாக ஆட்சி அமைப்பதில் பாரதிய ஜனதாவுக்கு தலைவலி ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், மகாராஷ்டிரா மாநிலத்தில் ஒரு மத்திய அமைச்சர், ஒரு மாநில அமைச்சரை நாங்கள் கேட்டிருப்பதாக இந்திய குடியரசுக் கட்சியின் தலைவரும், மத்திய அமைச்சருமான ராம்தாஸ் அத்வாலே தெரிவித்துள்ளார்.
அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு ஆதித்யா தாக்கரே துணை முதலமைச்சர் பதிவியை ஏற்றுக்கொள்ளவேண்டும் எனவும் ராம்தாஸ் அத்வாலே கூறியுள்ளார். முதல் இரண்டரை ஆண்டுகள் சிவ சேனாவுக்கு முதலமைச்சர் பதவியும், அடுத்த இரண்டரை ஆண்டுகளுக்கு பாஜகவுக்கு முதலமைச்சர் பதவியும் வழங்கிட வேண்டும் என சிவ சேனா கோரிக்கை வைத்துவந்த நிலையில், ராம்தாஸ் அத்வாலே தற்போது இவ்வாறு தெரிவித்துள்ளார்.
மேலும், மாநில அமைச்சரவையில் சம பங்கு அளிப்பது தொடர்பாக உத்தவ் தாக்கரேவை சந்தித்து அமித் ஷா பேசவுள்ளதாகவும் அவர் கூறினார்.
இதையும் படிங்க: ஆதித்ய தாக்கரே முதலமைச்சராக வாய்ப்பு..?