மத்தியப்பிரதேச மாநிலம் குவாலியரில், ராம ஜென்ம பூமி தீர்த்த ஷேத்ரா தலைவர் மஹந்த் நிரித்ய கோபால் தாஸ் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது ஆறு மாதத்துக்குள் ராமர் கோயில் கட்டும் பணிகள் தொடங்கும் என எதிர்பார்க்கிறோம்.
அரசுக்கு தற்போது அதிக சுமை இருப்பதால், அரசிடமிருந்து பணம் கோரப்போவதில்லை என்றும், பொதுமக்களிடம் பணம் கோரப்படும். ராமர் கோயில் கட்டுமான பூமி பூஜையின் போது, பிரதமர் நரேந்திர மோடி, உத்தரப் பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்ய நாத், மத்திய பிரதேச முதலமைச்சர் கமல்நாத் உள்ளிட்ட பலருக்கும் அழைப்புகள் விடுக்கப்படும்" என்றார்.
கடந்தாண்டு நவம்பர் 9ஆம் தேதி, அயோத்தியில் ராமர் கோயில் கட்டிக்கொள்ளவும், மசூதி கட்டிக்கொள்ள அயோத்தியில் தனியாக ஐந்து ஏக்கர் நிலம் ஒதுக்கீடு செய்ய வேண்டும் எனவும் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இதன்மூலம் பல நூற்றாண்டுகளாக நீடித்த இடப்பிரச்னை முடிவுக்கு வந்தது நினைவுகூரத்தக்கது.
இதையும் படிங்க: இந்திய - அமெரிக்க நட்புறவை பறைசாற்றவுள்ள 'நமஸ்தே ட்ரம்ப்' நிகழ்ச்சி!