மும்பை: மகாராஷ்டிரா முதலமைச்சர் உத்தவ் தாக்கரே, ராமர் கோயில் பூமி பூஜையை காணொலிக் காட்சி வாயிலாக நடத்தினால் நன்றாக இருக்கும் எனக் கருத்து தெரிவித்துள்ளார்.
சிவசேனா கட்சியின் தலைவரும் மகாராஷ்டிரா மாநிலத்தின் முதலமைச்சருமான உத்தவ் தாக்கரே, “என்னால் உத்தரப் பிரதேசத்தில் உள்ள அயோத்தி செல்லமுடியும். ஆனால் பல கோடி பக்தர்கள் கரோனா காலம் என்பதால் இந்நிகழ்வில் பங்கேற்க முடியாமல் போகும்” எனத் தெரிவித்துள்ளார்.
மேலும், பக்தர்களை கட்டுப்படுத்துவது என்பது முடியாத காரியம் என்று தெரிவித்துள்ள அவர், காணொலி காட்சி வாயிலாக பூமி பூஜையை நடத்தினால், அனைவரும் உலகில் எங்கிருந்தாலும் கண்டுகளிக்க வசதியாக இருக்கும் என்றும் கூறியுள்ளார்.
'கரோனாவை ஒழிக்க அனுமனை தினமும் 5 முறை வணங்குங்கள்'
முன்னதாக ஸ்ரீ ராம் ஜென்மபூமி தீர்த்த க்ஷேத்ரா அறக்கட்டளையின் உறுப்பினர்கள் பிரதமர் நரேந்திர மோடி ஆகஸ்ட் 5ஆம் தேதி ராமர் கோயில் கட்டுமான பணிகளைத் தொடங்கும் "பூமி பூஜை" விழாவில் கலந்துகொள்வதற்காக அயோத்திக்கு வருவார் என்று கூறியிருந்தனர்.