அயோத்தி: அயோத்தியில் ராமர் கோயில் கட்டுமான பூமி பூஜைகள் புதன்கிழமை (ஆக5) தொடங்குகின்றன. இந்தப் பூமி பூஜைக்கு முந்தைய சடங்குகள் கவுரி கணேஷ் பூஜையுடன் இன்று (ஆக.3) தொடங்கின.
இந்தப் பூஜைகள் காலை 8.30 மணிக்கு 11 பூசாரிகளால் வேத மந்திரங்கள் முழங்க தொடங்கப்பட்டன. அப்போது ராமாயாண காட்சிகளும் நடைபெற்றன.
இது குறித்து சாமியார் மகாந்த் சத்யேந்திரா கூறுகையில், "அயோத்தியில் இன்று ராமர் எழுந்தருளியிருக்கிறார். இந்தப் புனித நகரத்தில் மணிகளின் சப்தத்துக்கு மத்தியில் வேதமந்திரங்கள் முழக்கமிடுகின்றன.
இந்தச் சடங்குகள் மூன்று நாள்கள் நடக்கும், அடுத்து கோயில் கட்டுமானம் நடக்கும்” என்றார். சாந்த் சமிதியின் மகாராஜ் கன்ஹையா தாஸ், "இதை விட ஒரு நல்ல சந்தர்ப்பம் இருக்க முடியாது. விநாயகர் ஆசீர்வாதத்துடன், கோயில் இப்போது எந்த இடையூறும் இல்லாமல் கட்டி முடிக்கப்படும்" என்றார்.
அயோத்தியில் ராமர் கோயில் கட்ட பிரதமர் நரேந்திர மோடி ஆகஸ்ட் 5ஆம் தேதி அடிக்கல் நாட்டுகிறார்.
இதையும் படிங்க : “அயோத்தியில் ராமர்கோயில் என் கனவு”- உத்தரப் பிரதேச முன்னாள் முதலமைச்சர் கல்யாண் சிங் பிரத்யேக பேட்டி!