ETV Bharat / bharat

ரஷ்ய ராணுவ அணிவகுப்பில் கலந்துகொள்ளும் ராஜ்நாத் சிங்! - இரண்டாம் உலகப் போரில் ரஷ்யா வெற்றி பெற்று 75ஆண்டு நிறைவு

டெல்லி: இரண்டாம் உலகப் போரில் ரஷ்யா வெற்றியடைந்து 75 ஆண்டுகள் நிறைவடைவதையொட்டி நடைபெறும் ராணுவ அணிவகுப்பு நிகழ்ச்சியில் கலந்துகொள்ள இந்தியப் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் அந்நாட்டிற்குச் செல்கிறார்.

rajnath-to-depart-on-monday-for-moscow-to-attend-victory-day-parade

author img

By

Published : Jun 20, 2020, 11:36 PM IST

இரண்டாம் உலகப் போரில் ரஷ்யா ஜெர்மனியை வீழ்த்தியதைக் கொண்டாடும் வகையில் ஆண்டுதோறும் பாரம்பரிய முறையில் மே ஒன்பதாம் தேதி ராணுவ அணிவகுப்பு நடத்துவது வழக்கம். இந்தாண்டு கரோனா வைரஸ் பரவலின் காரணமாக இந்த அணிவகுப்பு ஜூன் 24ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

இரண்டாம் உலகப் போரில் வெற்றிபெற்று 75 ஆண்டுகள் நிறைவடைந்ததைச் சிறப்பாகக் கொண்டாட எண்ணிய ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் கடந்த மே மாதம் அந்நாட்டின் பாதுகாப்புத் துறை அமைச்சர் செர்ஜி ஷோயிகுவுடன் காணொலிக் காட்சி மூலம் ராணுவ அணிவகுப்பு குறித்து ஆலோசனை நடத்தினார். அந்த ஆலோசனையின்போது ஜூன் 24ஆம் தேதி மாஸ்கோவிலுள்ள செஞ்சதுக்கத்தில் (red square) ராணுவ அணிவகுப்பு நடத்த முடிவுசெய்யப்பட்டது.

இந்தச் செஞ்சதுக்கத்தில் 1945ஆம் ஆண்டு ஜூன் 24ஆம் நாள் வரலாற்று சிறப்புமிக்க அணிவகுப்பு நடைபெற்றதை நினைவுகூரும் வகையில் இந்தாண்டு ராணுவ அணிவகுப்பு செஞ்சதுக்கத்தில் நடைபெறவுள்ளதாகக் கூறப்படுகிறது. மேலும், ராணுவ அணிவகுப்பில் பங்கேற்பவர்களின் உடல்நலனைக் கருத்தில்கொள்ளுமாறும் புதின் வலியுறுத்தியுள்ளதாகக் கூறப்படுகிறது.

இந்த ராணுவ அணிவகுப்பு நிகழ்ச்சியில் கலந்துகொள்ள இந்தியப் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் திங்கள்கிழமை ரஷ்யா செல்கிறார். இந்த அணிவகுப்பில் இந்தியாவின் முப்படைகளைச் சேர்ந்த 75 வீரர்கள் பங்கேற்கவுள்ளனர்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.