மத்திய நிதித் துறையிலிருந்து சுபாஷ் சந்திர கார்க் வேறு துறைக்கு மாற்றம் செய்யப்பட்டதையடுத்து, புதிய நிதித் துறை செயலராக ராஜிவ் குமார் நியமிக்கப்பட்டுள்ளார். இந்த நியமனத்துக்கு மத்திய அமைச்சரவைக் குழு ஒப்புதல் அளித்துள்ளது.
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவைக் குழு புதிய மத்திய நிதித் துறை செயலராக ராஜிவ் குமாரை நியமிப்பதற்கு ஒப்புதல் வழங்கியது. ராஜிவ் குமார் 1984இல் ஜார்க்கண்டில் இந்திய குடிமைப்பணி (ஐஏஎஸ்) பதவி வகித்தார். நிதித் துறை செயலராக இருந்த சுபாஷ் சந்திர கார்க் மின் துறைக்கு மாற்றப்பட்டதைத் தொடர்ந்து, அவர் வகித்துவந்த நிதித் துறை செயலராக ராஜிவ் குமார் நேற்று நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
மத்திய அரசு ஏற்கனவே சில நாட்களுக்கு முன்பு பல்வேறு துறைகளின் செயலர்கள், உயர் அலுவலர்களின் பதவிகளை மாற்றியமைத்தது.