ராஜஸ்தான்: நவராத்திரி விழாவின் முக்கிய நிகழ்வான ஆயுத பூஜை மற்றும் விஜயதசமி கொண்டாட்டங்கள் நேற்றுடன் நிறைவடைந்ததையொட்டி இறுதி நாளில் துர்க்கை அம்மன் சிலைகளை ஆற்றில் கரைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் தோல்பூர் நகரில் உள்ள பார்வதி ஆற்றில் துர்க்கை அம்மன் சிலைகளைக் கரைக்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களில் 10 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்தனர். முன்னதாக, ஒரு சிறுவன் குளிப்பதற்காக ஆற்றில் குதித்துள்ளார். அவர் நீரில் மூழ்கியதால் மற்றவர்கள் அவரைக் காப்பாற்றும் முயற்சியில் ஆற்றில் குதித்தனர். ஆனால் அவர்களும் நீரில் மூழ்கி இறந்துவிட்டதாக காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
நீரில் மூழ்கிய 10 பேரில் 7 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. மேலும் மூன்றுபேரின் உடல்களைத் தேடும் பணியில் காவல்துறை மற்றும் தீயணைப்புத் துறையினர் ஈடுபட்டுள்ளனர். நீரில் மூழ்கி இறந்தவர்களுக்கு முதல்கட்டமாக ஒரு லட்சம் ரூபாய் நிதி உதவி அறிவிக்கப்பட்டுள்ளது. நவராத்திரி விழாவின் இறுதிநாளில் நடைபெற்றுள்ள இந்த துயரச்சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
இதையும் படிங்க:ஆற்றில் பாய்ந்த பைக் - கயிறு கட்டி மீட்ட தீயணைப்புத் துறையினர்!