ETV Bharat / bharat

ராஜஸ்தானில் பெட்ரோல், டீசல் விலை 4 விழுக்காடு அதிகரிப்பு! - ராஜஸ்தானில் பெட்ரோல், டீசல் விலை 4 விழுக்காடு அதிகரிப்பு

ஜெய்ப்பூர்: ராஜஸ்தானில் அதிகரித்து வரும் கரோனா வைரஸ் பாதிப்புகளை சமாளிக்கும் வகையில், அம்மாநில அரசு வருவாயை ஈட்ட பெட்ரோல், டீசல் விலையை நான்கு விழுக்காடு அதிகரித்துள்ளது.

jaipur news  rajasthan news  Chief Minister Ashok Gehlot  corona virus  covid 19  Increase in VAT rates  ashok gehlot increases vat on petrol and diesel  petrol and diesel prices rise in rajasthan  rajasthan chief minister ashok gehlot on covid-19  coronavirus in rajasthan  ராஜஸ்தானில் பெட்ரோல், டீசல் விலை 4 விழுக்காடு அதிகரிப்பு  ராஜஸ்தானில் கரோனா பாதிப்பு, முழு அடைப்பு, பெட்ரோல், டீசல் விலை உயர்வு

author img

By

Published : Mar 22, 2020, 5:35 PM IST

ராஜஸ்தானில் கரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்து காணப்படுகிறது. இந்த வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் வகையில் மாநிலத்தில் பெட்ரோல், டீசலுக்கு நான்கு விழுக்காடு மதிப்பு கூட்டு வரி அதிகரிக்கப்பட்டுள்ளது.

இந்த அறிவிப்பு பொதுமக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. புதிய அறிவிப்பின்படி மாநிலத்தில் பெட்ரோல் மீதான மதிப்பு கூட்டு வரி (வாட்) 34 விழுக்காடு ஆகவும், டீசல் மீதான வரி 26 விழுக்காடு ஆகவும் உள்ளது.

கரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் விதமாக இந்த நடவடிக்கையை மாநில அரசு எடுத்துள்ளதாக அரசு வட்டாரங்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளன. மேலும் இதன் மூலம் கிடைக்கும் வருவாய் சுகாதார மற்றும் உள்கட்டமைப்புக்கு பயன்படுத்தப்படும் என்றும் அந்த தகவல்கள் கூறுகின்றன.

முன்னதாக மாநில முதலமைச்சர் அசோக் கெலாட், மோடி அரசு தனது பட்ஜெட்டில் மாநிலத்திற்கு பொருத்தமான பங்கினை வழங்கவில்லை என்று கூறினார். மத்திய அரசின் வெவ்வேறு திட்டங்கள் காரணமாக மாநிலங்கள் கடுமையான சிரமங்களை எதிர்கொள்கின்றன.

இந்த முரண்பாடுகளைத் தவிர்ப்பதற்காக வாட் வரி அதிகரிக்கப்பட்டுள்ளது. பல்வேறு திட்டங்கள் வழங்குவதை மத்திய அரசு தடுத்து நிறுத்தி உள்ளது. மாநிலத்தின் பங்கிற்கு பட்ஜெட் ஒதுக்கீட்டை மத்திய அரசு வழங்கவில்லை.

இதன் காரணமாக மையம் மற்றும் மாநிலத்தின் திட்டங்களை நடத்துவதில் நிதிச் சிக்கல்கள் எதிர்கொள்ளப்படுகின்றன. வாட் விகிதங்களை அதிகரிப்பதன் மூலம் அரசாங்கம் பொக்கிஷங்களை நிரப்பத் தொடங்கியுள்ளது.

இந்தியாவில் கரோனா வைரஸ் தொற்றுக்கு 300க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து ராஜஸ்தானில் வருகிற 31ஆம் தேதி வரை முக்கிய வணிக வளாகங்கள், தியேட்டர்கள் மற்றும் வழிபாட்டு தலங்கள் மூடப்பட்டுள்ளன.

இதையும் படிங்க: ரூபாய் நோட்டு மூலம் பரவுமா கரோனா - அதிர்ச்சியளிக்கும் புதிய தகவல்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.