இதுகுறித்து தெற்கு ஜெய்ப்பூரின் துணை ஆணையர் மனோஜ் குமார் கூறுகையில், " ”சில எம்எல்ஏக்கள், எம்பிக்களின் செல்போன் உரையாடல்கள் கண்காணிப்படுவதாக பொய்யான தகவல்களை மக்களிடம் பரப்பி வந்த ராஜஸ்தான் முன்னாள் முதலமைச்சர் சச்சின் பைலட்டின் ஆலோசகர் லோகேந்திர சிங் மற்றும் பத்திரிகையாளர் சரத்குமார் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து தகவலறிந்த சைபர் செல் போலீஸ் சம்பந்தப்பட்ட நபர்களை தொடர்பு கொண்டு தகவலுக்கான ஆதாரத்தை கேட்கையில், திருப்திகரமான பதில்கள் வராத காரணத்தால் மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது" எனத் தெரிவித்தார்.